ITR Filing Online: மதிப்பீடு ஆண்டு 2019-20க்கான வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகஸ்ட் 31ம் தேதி நாளாகும். குறிப்பட்ட தொகைக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள், இந்த தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்தாக வேண்டும். ஆக.31, 2019க்கு பிறகு வருமான வரித் தாக்கல் செய்தால் ரூ.5000லிருந்து ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும். வருமான வரித்துறையின் ஆன்லைன் தளமான incometaxindiaefiling.gov.in மூலம், வருமான வரியை நீங்கள் பதிவு செய்யலாம். மெயில், ஆன்லைன் பேங்கிங், ஏடிஎம் மற்றும் ஆதார் போன்ற பல வழிகள் மூலம் வருமான வரி சமர்ப்பித்தலை சரிபார்த்துக் கொள்ளலாம்.
PAN எண் மூலம் incometaxindiaefiling.gov.in தளத்தில் வருமான வரியை தாக்கல் செய்ய ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். அப்படி ஒருவேளை PAN எண் இல்லையெனில், அவர்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி வருமான வரித் தாக்கல் செய்யலாம்.
வருமான வரித் தாக்கல் செய்ய, வருமான வரித்துறை ITR 1, ITR 2, ITR 3, ITR 4, ITR 5, ITR 6 and ITR 7 எனும் ஆவணங்களை வழங்குகிறது.
ITR Filing Online: ஆன்லைனில் நீங்கள் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி?
e-filing தளத்தில் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு கொண்டு லாக் இன் செய்யவும்.
"e-file"க்கு கீழ் உள்ள "prepare and submit ITR Online" என்பதை க்ளிக் செய்யவும்.
சரியான வருமான வரி ஆவணத்தை தேர்வு செய்து, சரியான வருடத்தையும் குறிப்பிடவும்.
தகவல்கள் அனைத்தையும் நிரப்பி, "submit" பட்டனை க்ளிக் செய்க
டிஜிட்டல் கையொப்ப சான்றிதழை அப்லோட் செய்க
இறுதியாக, "submit" கொடுக்கவும்.
இருப்பினும், வருமான வரி அறிக்கையை ஆன்லைனில் தாக்கல் செய்வது அல்லது சமர்ப்பிப்பது ஐடிஆர் செயல்முறையை நிறைவு செய்யாது. வருமான வரி அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் அதை சரிபார்க்க வருமான வரித் துறை பொதுமக்களை கேட்டுக் கொள்கிறது. மெயில், ஆன்லைன் பேங்கிங், ஏடிஎம் மற்றும் ஆதார் போன்ற பல வழிகள் மூலம் வருமான வரி சமர்ப்பித்தலை சரிபார்த்துக் கொள்ளலாம். வருமான வரித்துறையின் ஆன்லைன் தளமான incometaxindiaefiling.gov.in மூலம், வருமான வரியை நீங்கள் பதிவு செய்யலாம்.