Income Tax Return e-Filing for AY 2019-20: இந்தியாவில் மாத சம்பளக்காரர்கள், வணிகம் மற்றும் தொழில்முறையால் வருமானம் பெறுபவர்கள் உட்பட அனைவரும் வருமான வரி செலுத்துவது அவசியமான ஒன்று. ஒவ்வொரு மாத சம்பளக்காரர்களும் தங்கள் பெரும் நிலையான தொகை form 16-னில் பிரதிபலிப்பதால் அவர்களின் வரிப் பொறுப்பைக் கணக்கிடுவது எளிதான ஒன்றே. ஆனால், வணிகர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களின் வரிப் பொறுப்பைக் கணக்கிடுவது சற்று சிக்கலானது, ஏனெனில் அவர்களுது வருமானம் கால சூழ்நிலைக்கு ஏற்ப மாறக்கூடியதாய் இருக்கும்.
இதனால் சுயதொழில் வல்லுநர்கள் மற்றும் சிறு வணிகர்கள் தங்கள் வருமான வரித் தாக்கல் செய்யும் போது மனதில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்களை இங்கே நாம் பார்க்கலாம்.
உத்தேச வரி விதிப்பு திட்டத்தை பயன்படுத்துங்கள்:சிறு தொழில செய்வோர் மற்றும் தொழில்முறை வருமானம் உடையவர்களுக்கு ஒரு நிதியாண்டின் மொத்த வரவு, முறையே ரூ .2 கோடி மற்றும் ரூ .50 லட்சத்தை தாண்டவில்லை என்றால், அவர்கள் தங்கள் வருமான வரியை உத்தேச வரி விதிப்பு திட்டத்தின் கீழ் தாக்கல் செய்யலாம்.இந்த திட்டத்தில் உள்ள நன்மைகள் என்னவென்றால் தகுதியான வரி செலுத்துவோர் கணக்கு புத்தகங்களை வைத்திருக்க தேவையில்லை. வணிக வரி செலுத்துவோரின் வருமானம், தங்களது மொத்த வரவில் 6% முதல் 8% வரை கணக்கிடப்படுகிறது, அதே நேரத்தில் நிபுணர்களின் வருமானம் மொத்த வரவில் 50% ஆக கணக்கிடப்படுகிறது.
ஜிஎஸ்டி-யுடன் சரிபாருங்கள்:சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வணிக மற்றும் தொழில்முறை வரி செலுத்துவோர் தங்கள் ஜிஎஸ்டி பதிவு எண்ணை வருமான வரி படிவத்தில் வழங்க வேண்டும். வருமான வரித்துறை இப்போது தனது வருமான வரி படிவத்தில் பல ஜி.எஸ்.டி பதிவு எண்களை குறிப்பிட அனுமதிக்கின்றது.
வரி செலுத்துவோர் வழங்கிய தகவல்களின் சரியான தன்மையை சரிபார்க்க ஜி.எஸ்.டி நெட்வொர்க் மற்றும் ஐ-டி துறை இப்போது ஒருவருக்கொருவர் தங்களுது டேட்டாவை பரிமாறிக்கொள்கின்றன. எனவே, வருமான வரி படிவத்த்தை தாக்கல் செய்வதற்கு முன், ஜி.எஸ்.டி.என் இல் கொடுக்கப்பட்ட விவரங்களை சரிசெய்யுங்கள். பொருந்தாத தன்மை இருந்தால், அதற்கான காரணத்தை அடையாளம் காணுங்கள். சில நேரங்களில் வரி செலுத்துவோர் அடுத்த நிதியாண்டில் கடந்த நிதியாண்டிற்கான நிலுவைத் தொகையைப் பெறுகிறார்கள், இதன் காரணமாக படிவம் 26ஏஎஸ் அல்லது ஜிஎஸ்டி வருமானத்தில் தாக்கல் செய்யப்பட்ட விவரங்கள் படி, அறிக்கையிடப்பட்ட ரசீதில் வேறுபாடு ஏற்படுகிறது. எனவே, பொருந்தாத தன்மையைக் கண்டுபிடிக்க தயாராக இருங்கள்.
பண்ணமில்லா பரிவர்த்தனைக்கு மாருங்கள்: நமது அரசாங்கம் பணமில்லா பரிவர்த்தனையை மிகவும் வேகமாக பரப்பிவருகிறது. இதனை ஊக்குவிக்கும் விதமாக உத்தேச வரி விதிப்பு திட்டத்தில் நீங்கள் உங்கள் தொழில் தொழில் கணக்குவழக்குகளை டிஜிட்டல் பரிவர்த்தனையில் மட்டும் பயன்படுத்தியிருந்தால் உங்களுது நிகர வருமானக் கணக்கில் இரண்டு சதவீதத்தை விடுத்து 6 சதவீதமாக கணக்கீடு செய்கிறது.
ஆவணங்கள் மிக முக்கியம்:வருமான வரியைத் தாக்கல் செய்யும் போது உங்களுக்குத் தேவையான சில முக்கிய ஆவணங்களாக இருக்கும் :ஜிஎஸ்டி பதிவு, பான் கார்டு, அனைத்து வங்கிகளின் கணக்கு அறிக்கைகள், முதலீடு தொடர்பான ஆவணங்கள், படிவம் 26ஏஎஸ் போன்றவைகளை எப்போதும் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள.
இறுதியாக :அபராதம் செலுத்தாமல் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய 31 ஆகஸ்ட் 2019 காலக்கெடு இன்னும் சில வாரங்கள் மட்டுமே உண்டு என்பதை கவனத்தில் வைத்து கொள்ளுங்கள் . கடைசி நிமிட அவசரங்களைத் தவிர்க்க உங்கள் வருமானத்தை சீக்கிரம் தாக்கல் செய்வதே நன்று.