வருமான வரி ரீஃபண்ட் தாமதம் ஆக காரணம்!

உங்களின் அலட்சியமும், அல்லது தவறான முகவரி என்று தெரிந்தால், உங்களில் அப்ளிக்கேஷன் கேன்சல் ஆக அதிகமான வாய்ப்புகள் உண்டு.

By: March 6, 2018, 3:54:38 PM

இந்தியாவில், வருமான வரி தாக்கல் செய்தோருக்கு வருமான வரி துறை திரும்பி செலுத்த வேண்டிய தொகை, அவர்களிடம் வந்து சேர்வதற்கு பல நேரங்களில் தாமதம் ஏற்படுகிறது. இதற்கான முக்கியமான சில காரணங்களை வரிமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1. தாமதமான தாக்கல்:
உங்களுக்கு உரிய நேரத்தில் உங்களுடைய தொகை வந்து சேர வேண்டும் என்று நினைத்தால், அதற்கு நீங்கள் முதலில் உரிய நேரத்தில் வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின்பு அவர்கள் அளிக்கும் கால இடைவெளிக்குள் தேவையான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

2.தவறான தரவு:
நீங்கள் வரிமான அதிகாரிகளிடம்  அளிக்கும் தகவல்கள் துல்லியமாக இருத்தல் வேண்டும். சிலர், அவர்களின் ஆதார் கார்டில் துவங்கி, அடிப்படை ஆவணங்கள் என அனைத்து தரவுகளின் விவரங்களையும் சரியான நேரத்தில் பதிவு செய்யாமல் இருப்பது மிகவும் தவறானது ஆகும்.

3. பொருத்தமற்ற டிடிஎஸ்:
ஃபார்ம் 16ல் நீங்கள் பதிவிடும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருத்தல் வேண்டும். முக்கியமாக உங்களின் பிஎஃப் தொகை பிடித்தம், கணக்கு எண், ஆகியவற்றை முறையாக பதிவு செய்திருக்க வேண்டும்.

4. நேரடி சோதனை:
நீங்கள் அளித்திருக்கும் தகவல் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் உங்கள் வீட்டிற்கு நேரடியாக வந்து தகவல்களை உறுதி செய்வார்கள். அந்த சமயத்தில் உங்களின் அலட்சியமும், அல்லது தவறான முகவரி என்று தெரிந்தால், உங்களில் அப்ளிக்கேஷன் கேன்சல் ஆக அதிகமான வாய்ப்புகள் உண்டு.

மேலே கூறப்பட்டுள்ளது போல பல்வேறு காரணங்களால், வருமான வரித்துறையின் ரீஃபண்ட் தாமதம் ஆக வாய்ப்புகள் உண்டு. சமீபத்தில் நடத்திய ஆய்வில், 447 நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்துக்கொள்ளப்படும் வரி பணத்தை நிறுவனங்கள் அரசிடம் அளிக்காமல் தனது பிற வர்த்தகத்தில் முதலீடு செய்து வருவது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Income tax return filing top 6 reasons why your income tax refund is getting delayed

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X