உஷார்.. Income tax கட்டும் போது போலி வீட்டு பில் கொடுத்தால் இதுதான் நடக்கும்!

ITR Filing 2019-20: வாடகை செலுத்தியதற்கான (Rent Receipts) ஆதாரங்களையும் சேகரித்து வருவதுண்டு.

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் மற்றும் தனிநபர் வருமான வரி செலுத்துபவர்கள், வருமான வரி விலக்கு பெறுவதற்காக அடிப்படை விலக்கு தொகை போக வருமான வரி விதி 80சி பிரிவின்படி குறிப்பிட்ட தொகை வரையில் வரி விலக்கு பெறமுடியும் என்பது வரி செலுத்துவோர் அனைவரும் அறிந்ததே.

இவர்கள் சமர்ப்பிக்கும் பில் மற்றும் ஆவணங்கள் மற்றும் வருமான வரித்துறையில் அவர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் தானாகவே வரி ரீபண்ட்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்தே அனைத்து தொழில் நிறுவனங்களிலும் உள்ள எச் ஆர் டிபார்ட்மெண்ட் வருமான வரி வரம்பிற்குள் வரும் அனைத்து ஊழியர்களையும் தேடிப்பிடித்து அவர்களின் கழுத்தை பிடிக்காத குறையாக வருமான வரி விலக்குக்காக செலவு செய்த பில்களையும் (Reimbursement) முதலீடு (Investments) செய்ததற்கான ஆதாரங்களையும் வாடகை செலுத்தியதற்கான (Rent Receipts) ஆதாரங்களையும் சேகரித்து வருவதுண்டு.

Income Tax Return Filing 2019-20 income tax rules!

கடந்த நிதி ஆண்டுக்கான வரி செலுத்தும் நிகழ்வில் வேலைபார்க்கும் அனைவரும் மும்முரமாக ஈடுபட்டு பல ஆவணங்களை தயார் செய்து கொண்டிருப்பீர்கள் .அதற்காக போலியான ஆவணங்களை தாக்கல் செய்து வரியை குறைப்பது படித்தவர்களின் மத்தியில் தற்போது அதிகரித்து வருகின்றது .
அதற்கான காரணமாக அரசின் செயல்பாட்டையோ , அதிகபடியான வரி வசூலையோ , மற்றவர்கள் கட்டாமல் தானே ஏமாற்றுகிறார்கள் நான் ஏன் கட்டவேண்டும் என கூறியோ நியாயம் கற்பிக்க முயன்றால் செய்வது சரியானதாகிவிடாது.

மருத்துவச் செலவுகளுக்காக, முறைகால போக்குவரத்து சலுகை (Leave travel allowance) சலுகைக்கும் , வாடகை வீட்டில் இருப்பவர்கள் ரசீது பில் ஆகியவற்றை செலுத்தி வருமான வரி செலுத்துவதில் இருந்து விதிகளுக்கு உட்பட்டு விலக்கு பெறமுடியும்.

ஒவ்வொரு வருடமும், போலியான மதிப்பில் வீட்டு வாடகை ரசீது கொண்டு அதிகளவிலான வருமானத்திற்கு வரி விலக்கு பெறுவது மாத சம்பளக்காரர்களுக்கு ஒரு வழக்கமாக மாறியுள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

ஒரு லட்சத்திற்கும் குறைவாக வீட்டு வாடகையை எந்த ஆவண சான்றும் இல்லாமல் (பான் கார்டு ) காட்டலாம் என்பதால் அனைவரும் 8300 என வாடகை போடுவது வழக்கமான ஒன்றாக இருக்கின்றது .இன்னும் பலரோ 12000-15000 அளவிற்கு வீட்டு வாடகையை கொடுப்பதாக குறிப்பிடுவதோடு மட்டுமல்லாமல் போலியான பான் கார்டு விவரங்களையும் கொடுக்கின்றனர் .

ஒரே வீட்டிற்கு பலர் வாடகை கொடுப்பதாக கூறுவதும் நடக்கிறது.வாடகைக்கு குடியிருக்காத பலரும் கூட இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வரி குறைப்பில் ஈடுபடுகின்றனர் .மக்களின் முழுமையான வருமானத்திற்கு முறையாக வரி வசூலிக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ள வருமான வரித் துறை, தற்போது மக்கள் பயன்படுத்தி வரும் சட்டத்திற்கு எதிரானது வழிகளை அடைந்து வருகிறது.அதன் படி இனி, வருமான வரித்துறை நினைத்தால், ஒரு நபர் தான் குடியிருக்கும் வீட்டிற்கும், அளிக்கப்படும் வாடைக்கான முறையான ஆதாரங்களைக் கோரவும் முடிவுசெய்துள்ளது. இனிமேல் வருமான வரி தாக்கல் செய்யும்போது போலியான ஆவணங்களை சமர்பிக்கலாம் என நினைப்பவர்கள் விதிமுறைகளை கவனத்தில் கொண்டு செயல்படுவது முக்கியம்.

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close