/tamil-ie/media/media_files/uploads/2022/04/tax-1200-1.jpg)
Income Tax Saving Schemes: Instruments which can help you save tax: பெரும்பாலான வரி செலுத்துவோர் வரி சேமிப்பிற்காக முதலீடுகளைச் செய்ய முனைகின்றனர். சில வரி செலுத்துவோர் சிறந்த சம்பளத்திற்காக தங்கள் வேலையை மாற்றியிருக்கலாம், அதாவது அவர்களின் வரிப் பொறுப்புகள் அதிகரித்திருக்கலாம் மற்றும் அதிக வரி விலக்கு பெற அதிக முதலீடுகளைச் செய்ய வேண்டியிருக்கும்.
உங்கள் வரிப் பொறுப்புகளைக் குறைக்க உதவும் பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிச் சேமிப்பை வழங்குகின்றன. பிரிவு 80C பல முதலீடுகளை உள்ளடக்கியது, இதன் மூலம் உங்கள் மொத்த வருமானத்தில் விலக்குகளை கோரலாம். இருப்பினும், இது ஒரு நிதியாண்டில் ரூ. 1.5 லட்சம் வரை மட்டுமே. இது தவிர, பிரிவு 80டியின் கீழ் நீங்கள் ரூ. 1 லட்சம் வரை வரியைச் சேமிக்கலாம்.
உங்கள் வரிச் சேமிப்பு முதலீடுகளைச் செய்யும்போது கருத்தில் கொள்ளக்கூடிய சிறந்த வரிச் சேமிப்பு திட்டங்கள் இங்கே:
பொது வருங்கால வைப்பு நிதி (PPF)
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது நீண்ட கால வரி சேமிப்பு திட்டமாகும், இது முதலீட்டின் மீதான சிறந்த வருமான விகிதத்தை வழங்குகிறது. இது கணக்கைத் தொடங்கியது முதல் 15 ஆண்டுகள் முதலீட்டுக் காலத்தைக் கொண்டுள்ளது மற்றும் வருமான வரிச் சட்டத்தின் கீழ் வட்டி மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல் ஆகியவற்றிற்கு வரி இல்லை. கூடுதலாக, நிதியாண்டில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு கோரலாம்.
ஒரு நிதியாண்டில் PPF கணக்கிற்கான குறைந்தபட்ச பங்களிப்பு ரூ.500 மற்றும் அதிகபட்சமாக ரூ.1,50,000 ஆகும். மேலும், வைப்புத்தொகையை மொத்தமாகவோ அல்லது தவணையாகவோ செய்யலாம். இருப்பினும், முதலீட்டாளர்கள் ஒரு நிதியாண்டின் இறுதிக்குள் தங்கள் பிபிஎஃப் கணக்கில் குறைந்தபட்சம் ரூ.500 முதலீடு செய்யத் தவறினால், அதற்கு முந்தைய ஆண்டிற்கான ரூ.50 அபராதமும், அந்த ஆண்டுக்கான சந்தா ரூ.500 நிலுவைத் தொகையும் செலுத்த வேண்டும்.
தற்போது, பிபிஎஃப் மீதான வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.1 சதவீதமாக உள்ளது, இது ஆண்டுதோறும் கூட்டப்படுகிறது.
தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC)
தேசிய சேமிப்புச் சான்றிதழின் (NSC) முதலீட்டுக் காலம் ஐந்து ஆண்டுகள் மற்றும் நிலையான வட்டி விகிதத்துடன் வருகிறது. இந்த திட்டத்தில் இணைய, அருகிலுள்ள எந்த தபால் நிலையத்திலும் முதலீடு செய்யலாம் மற்றும் தற்போதைய சூழ்நிலையில் வங்கி ஃபிக்சட் டெப்பாசிட்டை (FD) விட அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது.
முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் ரூ. 1,000 முதலீடு செய்ய வேண்டும், பின்னர் ரூ. 100 மடங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் (ரூ. 1,100, 1,200 மற்றும் பல). அதேநேரம், முதலீட்டுக்கு அதிகபட்ச வரம்பு இல்லை.
இந்த திட்டமும் பிரிவு 80C இன் ரூ.1.5 லட்சம் வரி சேமிப்பின் கீழ் வருகிறது. தற்போது, NSC இல் கிடைக்கும் வட்டி விகிதம் 6.8 சதவீதமாக உள்ளது, இது ஆண்டுதோறும் கூட்டப்படுகிறது. ஆனால் வட்டியானது முதிர்ச்சியின் போது செலுத்தப்படும் என்று இந்தியா போஸ்ட்டின் இணையதளத்தில் உள்ள தகவல் தெரிவிக்கிறது.
தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS)
தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) என்பது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் கட்டுப்படுத்தப்படும் ஒரு வகையான தன்னார்வ ஓய்வூதிய சேமிப்புத் திட்டமாகும். இதில், முதலீட்டாளர்கள் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்குகளைப் பெறலாம்.
இந்தத் திட்டம் பொது, தனியார் மற்றும் அமைப்புசாராத் துறையைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் கிடைக்கிறது மற்றும் சந்தாதாரர் திட்டமிட்ட சேமிப்பிற்கு வரையறுக்கப்பட்ட பங்களிப்பைச் செய்ய அனுமதிக்கிறது, இதன் மூலம் அவர்களின் எதிர்காலத்தை ஓய்வூதிய வடிவில் பாதுகாக்கிறது.
NPS ஆனது ஓய்வுபெறும் வயது வரை மக்கள் தங்கள் பணிக்காலம் முழுவதும் ஓய்வூதியக் கணக்கில் முதலீடு செய்ய அனுமதிக்கிறது. ஓய்வு பெறும்போது, முதலீட்டாளர்கள் மொத்த கார்பஸில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை திரும்பப் பெறலாம். NPS சந்தாதாரர், ஓய்வுக்குப் பிறகு கார்பஸின் மீதமுள்ள தொகையை மாதாந்திர ஓய்வூதியமாகப் பெறுவார்.
இதையும் படியுங்கள்: 8% க்கும் குறைவாக சொத்துக் கடன்; இந்த வங்கிகளில் அக்கவுண்ட் இருக்கா?
NPS க்கு விண்ணப்பிக்க, இந்திய தபால் அலுவலக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின்படி, முதலீட்டாளர் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் தேதியில் 18-70 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இந்த குறிப்பிட்ட திட்டத்தை உங்கள் வேலை மாறுதல் மற்றும் பணியிடங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். வரிச் சலுகைகளின் அடிப்படையில், இது பிரிவு 80 CCD(1) இன் கீழ் சம்பளத்தில் 10 சதவிகிதம் வரை (அடிப்படை+டிஏ) வரி விலக்குகளை வழங்குகிறது. இதன் மொத்த உச்சவரம்பு ரூ. 1.50 லட்சம். பிரிவு 80 CCE இன் கீழ் வழங்கப்பட்ட ரூ. 1.50 லட்சத்திற்கு மேல், பிரிவு 80 CCD(2) இன் கீழ் பணியமர்த்தப்படும் சம்பளத்தில் (அடிப்படை+டிஏ) 10 சதவீதம் வரை வரி விலக்கு பெறவும் பணியாளர் தகுதியுடையவர்.
வரி சேமிப்பு ஃபிக்சட் டெப்பாசிட்கள்
வரி சேமிப்பு ஃபிக்சட் டெப்பாசிட்கள் (FD) என்பது ஐந்து வருட காலவரையறை மற்றும் நிலையான வட்டி விகிதத்தைக் கொண்டுள்ளது. ஐந்தாண்டு FD யில் முதலீடு செய்வதன் மூலம், ஒரு தனிநபர் பிரிவு 80சியின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகைகளைப் பெறலாம்.
இந்த FDகளை பொது அல்லது தனியார் துறை கடன் வழங்குநரிடம் முதலீடு செய்யலாம். ஆனால் வழங்கப்படும் வட்டி விகிதங்கள் வங்கிக்கு வங்கி மாறுபடும். இது தவிர, இந்த நிதித் திட்டங்கள் தனிநபருக்கு வரிச் சலுகையை வழங்கப் போகிறது என்றாலும், முதிர்வு நேரத்தில் இந்த FDகள் மீதான வட்டிக்கு TDS பொருந்தும்.
வீட்டுக் கடன் செலுத்துதல்
நீங்கள் ஒரு வீட்டை வாங்கி, அதற்காக வீட்டுக் கடன் வாங்கியிருந்தால், பிரிவின் 80C இன் கீழ் அசல் தொகையின் EMI பகுதிக்கு வரி விலக்கு கிடைக்கிறது.
ஆயுள் காப்பீட்டு பிரீமியங்கள்
யூனிட்-இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டங்கள் (ULIPகள்), எண்டோமென்ட் பாலிசிகள் மற்றும் டேர்ம் இன்ஷூரன்ஸ் போன்ற பல்வேறு வகையான காப்பீட்டு பாலிசிகளுக்கு செலுத்தப்படும் பிரீமியங்கள் ரூ. 1.5 லட்சம் வரை வரிச் சலுகைகளை வழங்குகின்றன.
சுகாதார காப்பீட்டு பிரீமியம்
பிரிவு 80C இன் கீழ் வரும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் தவிர, நீங்கள் ஒரு மருத்துவக் காப்பீட்டை வாங்கினால், உங்கள் வரி விலக்கு வரம்பான ரூ. 1.5 லட்சத்திற்கு மேல் வரி சேமிக்கலாம். பிரிவு 80D இன் கீழ், மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் செலுத்துதலுக்கான வரி விலக்குகளில் ரூ.1 லட்சம் வரை நீங்கள் கோரலாம்.
25,000 ரூபாய் வரி விலக்கு, பணியில் இருப்போர், மனைவி மற்றும் சார்ந்திருக்கும் குழந்தைகளுக்கும், மூத்த குடிமக்களுக்கு 50,000 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது.
கூடுதலாக, சில மருத்துவ பரிசோதனைகளுக்கான கட்டணங்களும் இந்த வகையின் கீழ் வருகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.