Income Tax Tamil News: கோவிட் -19 தொற்று பரவல் காலத்தில் வரி செலுத்துவோரின் வசதிக்காக ரூபாய் 5 லட்சம் வரை நிலுவையில் உள்ள வருமான வரி ரீபண்ட்கள் விரைவில் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மத்திய நேரடி வரிகள் விதிப்பு வாரியம் (Central Board of Direct Taxes CBDT) ஏற்கனவே 10.2 லட்சம் ரீபண்ட்களை, மொத்தமாக ரூபாய் 4,250 கோடி அளவில் 14 ஏப்ரல் 2020 அன்றைய நிலவரப்படி வழங்கியுள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தது. இந்த ரீபண்டுகள் ஏற்கனவே 2019-2020 நிதியாண்டில் வழங்கப்பட்ட 2.50 கோடி ரீபண்டுகளை விட அதிகம்.
சுமார் 1.75 லட்சம் கூடுதல் ரீபண்டுகள் வழங்குவது செயல்பாட்டில் உள்ளது. அது வரி செலுத்துவோரின் வங்கி கணக்கில் நேரடியாக 5 முதல் 7 வேலை நாட்களில் வரவு வைக்கப்படும் என CBDT மேலும் கூறியுள்ளது.
Income tax refund status: உங்களுடைய வருமான வரி ரீபண்ட் செயலாக்கப்பட்டுவிட்டதா?
வருமான வரி ரீபண்ட்க்கு (I-T refund - ITR) தகுதி பெற உங்களுடைய ITR சரிப்பார்க்கப்பட்டு வருமான வரித்துறையால் செயலாக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். வருமான வரி அதிகாரிகளால் வரி வருமானம் சரிப்பார்க்கப்பட்டு செயலாக்கம் செய்யப்பட்ட பிறகே வருமான வரி ரீபண்டுகள் வழங்கப்படும்.
உங்களுடைய ITR செயலாக்கம் செயலாக்கப்பட்டுவிட்டதா (processed) என்பதை எப்படி சரிப்பார்ப்பது.
1. வருமான வரித்துறையின் வருமான வரி e-filing இணையதளத்தில் உள்நுழைந்து வரி வருமானம் தாக்கல் செய்யப்பட்டதன் நிலையை சரிப்பார்க்கலாம்.
2. dashboard ஐ சொடுக்கி return/forms ஐ பார்க்கவும்.
3. “Income tax returns” என்பதை தேர்ந்தெடுத்து “submit” என்பதை சொடுக்கவும்.
4. “acknowledgement number என்பதை சொடுக்கி வரி தாக்கல் செய்யப்பட்டதன் விரிவான நிலையை பார்க்கவும்.
உங்கள் ITR process செய்யப்படவில்லை என்றால் என்ன செய்வது ?
வருமான வருவாய் செயலாக்கம் செய்யப்படவில்லை என்றால், வருமான வரி செலுத்துபவர் குறை மனு (grievance petition) ஐ ஆன்லைன் மூலம் CPC/Assessing officer க்கு தாக்கல் செய்து வரி வருவாய் செயலாக்கும் நடைமுறையை வேகப்படுத்த கூறலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.