அரசு அறிவிப்பு: வருமான வரி ரீபண்ட் பணத்தை துரிதமாக பெறுவது எப்படி?

Income tax refund status: வருமான வரி அதிகாரிகளால் வரி வருமானம் சரிப்பார்க்கப்பட்டு செயலாக்கம் செய்யப்பட்ட பிறகே வருமான வரி ரீபண்டுகள் வழங்கப்படும்.

Income Tax Tamil Nadu News, Income Tax Chennai News, Income Tax Return, Income Tax Refund, வருமான வரித்துறை, இந்திய வருமான வரித்துறை

Income Tax Tamil News: கோவிட் -19 தொற்று பரவல் காலத்தில் வரி செலுத்துவோரின் வசதிக்காக ரூபாய் 5 லட்சம் வரை நிலுவையில் உள்ள வருமான வரி ரீபண்ட்கள் விரைவில் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மத்திய நேரடி வரிகள் விதிப்பு வாரியம் (Central Board of Direct Taxes CBDT) ஏற்கனவே 10.2 லட்சம் ரீபண்ட்களை, மொத்தமாக ரூபாய் 4,250 கோடி அளவில் 14 ஏப்ரல் 2020 அன்றைய நிலவரப்படி வழங்கியுள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தது. இந்த ரீபண்டுகள் ஏற்கனவே 2019-2020 நிதியாண்டில் வழங்கப்பட்ட 2.50 கோடி ரீபண்டுகளை விட அதிகம்.

சுமார் 1.75 லட்சம் கூடுதல் ரீபண்டுகள் வழங்குவது செயல்பாட்டில் உள்ளது. அது வரி செலுத்துவோரின் வங்கி கணக்கில் நேரடியாக 5 முதல் 7 வேலை நாட்களில் வரவு வைக்கப்படும் என CBDT மேலும் கூறியுள்ளது.

Income tax refund status: உங்களுடைய வருமான வரி ரீபண்ட் செயலாக்கப்பட்டுவிட்டதா?

வருமான வரி ரீபண்ட்க்கு (I-T refund – ITR) தகுதி பெற உங்களுடைய ITR சரிப்பார்க்கப்பட்டு வருமான வரித்துறையால் செயலாக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். வருமான வரி அதிகாரிகளால் வரி வருமானம் சரிப்பார்க்கப்பட்டு செயலாக்கம் செய்யப்பட்ட பிறகே வருமான வரி ரீபண்டுகள் வழங்கப்படும்.

உங்களுடைய ITR செயலாக்கம் செயலாக்கப்பட்டுவிட்டதா (processed) என்பதை எப்படி சரிப்பார்ப்பது.

1. வருமான வரித்துறையின் வருமான வரி e-filing இணையதளத்தில் உள்நுழைந்து வரி வருமானம் தாக்கல் செய்யப்பட்டதன் நிலையை சரிப்பார்க்கலாம்.

2. dashboard ஐ சொடுக்கி return/forms ஐ பார்க்கவும்.

3. “Income tax returns” என்பதை தேர்ந்தெடுத்து “submit” என்பதை சொடுக்கவும்.

4. “acknowledgement number என்பதை சொடுக்கி வரி தாக்கல் செய்யப்பட்டதன் விரிவான நிலையை பார்க்கவும்.

உங்கள் ITR process செய்யப்படவில்லை என்றால் என்ன செய்வது ?

வருமான வருவாய் செயலாக்கம் செய்யப்படவில்லை என்றால், வருமான வரி செலுத்துபவர் குறை மனு (grievance petition) ஐ ஆன்லைன் மூலம் CPC/Assessing officer க்கு தாக்கல் செய்து வரி வருவாய் செயலாக்கும் நடைமுறையை வேகப்படுத்த கூறலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

 

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Income tax tamil news income tax e filing portal income tax refund status

Next Story
எஸ்.பி.ஐ.-ன்னா சும்மாவா? 44 கோடி பேருக்கான இரட்டைச் சலுகைSBI recurring deposit scheme details state bank of india
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X