/tamil-ie/media/media_files/uploads/2019/08/gdp.jpg)
ஜூன் காலாண்டில் இந்தியாவின் 7.8 சதவீத ஜிடிபி வளர்ச்சி, அதே காலகட்டத்தில் சீனா பதிவு செய்த 6.3 சதவீதத்தை விட அதிகமாகும்.
தொழிலதிபர் கெளதம் அதானி, இரண்டு மத்திய அமைச்சர்கள் மற்றும் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்டோர் இந்தியா 4 டிரில்லியன் டாலர்களை தாண்டியுள்ளதாக இன்று (நவ.19) பாராட்டியுள்ளனர். இருப்பினும் நாடு இந்த சாதனையை அடைந்ததா என்பது குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் தகவல்கள் வெளியாகவில்லை.
மேலும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 டிரில்லியன் டாலர்களைத் தாண்டியது குறித்த வைரலான சமூக ஊடக இடுகை குறித்து நிதி அமைச்சகமும் தேசிய புள்ளியியல் அலுவலகமும் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில், “வைரலான செய்தி தவறானது என்றும், இந்தியா இன்னும் அந்த அடையாளத்தை அடையவில்லை” என்றும் உயர்மட்ட தகவல்கள் கூறுகின்றன.
சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளின் அடிப்படையில் சரிபார்க்கப்படாத ஸ்கிரீன்கிராப் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளன.
பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளின் எண்கள் பின்னடைவுடன் கிடைப்பதால், அனைத்து நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எண்களை நேரடியாகக் கண்காணிப்பது மிகவும் கடினம்.
இதற்கிடையில் அதானி ட்விட்டர் எக்ஸில், “வாழ்த்துகள், இந்தியா. ஜப்பானை $4.4 டிரில்லியன் மற்றும் ஜெர்மனியை $4.3 டிரில்லியன் முந்தியதன் மூலம், உலக GDP அடிப்படையில் இந்தியா 3வது பெரிய நாடாக உள்ளது. மூவர்ண எழுச்சி தொடர்கிறது! ஜெய் ஹிந்த்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல் மத்திய அமைச்சர்கள் ஜி கிஷன் ரெட்டி, மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜூன் காலாண்டில் இந்தியாவின் 7.8 சதவீத ஜிடிபி வளர்ச்சி, அதே காலகட்டத்தில் சீனா பதிவு செய்த 6.3 சதவீதத்தை விட அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில் வாசிக்க : India a $4 trillion economy? Adani to Fadnavis hail, but no official word
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.