மாநிலத்தில் உள்ள வங்கி கிளைகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என்று என்று மாநில அளவிலான வங்கி பணியாளர்கள் குழு (எஸ்.எல்.பி.சி) தெரிவித்துள்ளது.
இநதியாவில் பெருகி வரும் கொரோனா தொற்று பாதிப்பின் இரண்டாவது அலை காரணமாக மாநிலங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதை கருத்தில் கொண்டு, கருத்தில் கொண்டு, எஸ்.எல்.பி.சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் வரும் ஏப்ரல் 26 முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு என்றும் அறிவிக்கப்பட்டுள்து.
மேலும் பங்குதாரர்கள் மற்றும் மாநில அரசுடன் சரியான ஆலோசனை மற்றும் புதிய வழிகாட்டுதல்களை பின்பற்றி இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநிலத்தில் உள்ள அனைத்து உறுப்பு வங்கிகளுக்கும் தெரிவித்துள்ள தகவல்களில், நிர்வாக, மண்டல, பிராந்திய அலுவலகங்கள் மற்றும் பின் அலுவலகங்கள் மற்றும் பலவற்றில் ஊழியர்கள் பொதுமக்களுடன் நேரடி தொடர்பு இல்லாமல் சாதாரண வேலை நேரங்களின்படி செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சகநோயாகளிகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறளாளிகள் ஆகியோருக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான விருப்பம் வழங்கப்படலாம். சாத்தியமான இடங்களில், உள்ளூர் நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து கிளைகளின் கிளஸ்டர் அடிப்படையிலான செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று எஸ்.எல்.பி.சி தெரிவித்துள்ளது. ஆதார் சேர்க்கை மைய செயல்பாடுகள் நிறுத்தப்படும். வழக்கமாக பெரிய கூட்டம் கூடும் கிளைகளில் மாவட்ட மேலாளர் மூலம் கூட்டத்தை நிர்வகிக்க காவல்துறை உதவியை நாட வேண்டும் என்று எஸ்.எல்.பி.சி. கூறியுள்ளது.
மேலும் ஏடிஎம்கள் / சிடிஎம் / பண மறுசுழற்சி போன்ற அனைத்து மாற்று விநியோக சேனல்களும் செயல்படுகின்றன என்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும். வணிக நிருபர்கள் சேவைகள் எல்லா நேரங்களிலும் முழுமையாக செயல்பட வேண்டும். அந்தந்த மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைப்பதன் மூலமும், பிற விதிமுறைகளை கடைபிடிப்பதன் மூலமும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் கவனம் செலுத்துமாறு எஸ்.எல்.பி.சி வங்கிகளிடம் கூறியுள்ளது.
மாற்று விநியோக சேனல்களைப் பயன்படுத்தவும், கிளைகளில் நேரடியாக வருவதற்கு பதிலாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளைத் தேர்வு செய்ய தங்கள் வாடிக்கையாளர்களை வங்கிகள் ஊக்குவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil