இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ், மாற்ற முடியாத கடன் பத்திரங்களின் (என்சிடி) பொது வெளியீட்டை அறிவித்துள்ளது. இந்த பத்திரங்களுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 10.75 சதவீதம் வரை உள்ளது. இதில் முதலீடு செய்ய குறைந்தப்பட் தொகை ரூ.10 ஆயிரம் ஆகும்.
என்.சி.டி காலம்
முதலீட்டாளர்கள் 24 மாதங்கள், 36 மாதங்கள், 60 மாதங்கள், 84 மாதங்கள் மற்றும் 120 மாதங்கள் என வெவ்வேறு கால முதலீட்டைத் தேர்வு செய்யலாம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும்.
நிறுவனம் ₹100 கோடி பொது வெளியீட்டை செய்துள்ளது, இதன் மூலம் ரூ.200 கோடி வரை நிறுவனம் திரட்ட திட்டமிட்டுள்ளது. மே 13ஆம் தேதி திறக்கப்பட்ட இந்த என்.சி.டி விற்பனை மே 27ஆம் தேதி நிறைவடைகிறது.
சிறந்த வட்டி விகிதங்கள்
இந்த என்.சி.டி குறித்து முதலீடு நிபுணர்கள் சில ஆபத்து காரணிகளையும் குறிப்பிடுகின்றனர். அவற்றில் ஒன்று நிறுவனம் வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றம். இந்த மாற்றம் வாடிக்கையாளர்களின் வட்டி விகிதங்களில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
மேலும், இது பணப்புழக்க சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறுகிறது.
நான் கன்வர்டபிள் டிபென்சர்ஸ் எனப்படும் என்.சி.டி முதலீடுகள் நீண்ட கால மூலதன மதிப்பைப் பெறுவதற்காக பொது வெளியீட்டின் வடிவத்தில் நிறுவனங்களால் வெளியிடப்படுகின்றன. மாற்றத்தக்க கடனீட்டுப் பத்திரங்களுடன் ஒப்பிடுகையில் அவை சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“