பங்களாதேஷுக்கு சரக்குப் போக்குவரத்து வசதியை நிறுத்தியது இந்தியா - காரணம் என்ன?

பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் பேராசிரியர் முகமது யூனுஸ், சீனாவுக்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்டிருந்தபோது (மார்ச் 26-29), வடகிழக்கு இந்தியா நிலத்தால் சூழப்பட்டிருப்பதால், அந்தப் பிராந்தியத்திற்கு வங்கதேசம் தான் கடல் வழியின் "ஒரே பாதுகாவலர்" என்று கூறியிருந்தார்.

பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் பேராசிரியர் முகமது யூனுஸ், சீனாவுக்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்டிருந்தபோது (மார்ச் 26-29), வடகிழக்கு இந்தியா நிலத்தால் சூழப்பட்டிருப்பதால், அந்தப் பிராந்தியத்திற்கு வங்கதேசம் தான் கடல் வழியின் "ஒரே பாதுகாவலர்" என்று கூறியிருந்தார்.

author-image
WebDesk
New Update
bangladesh transhipment

bangladesh transhipment

பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் பேராசிரியர் முகமது யூனுஸ், சீனாவுக்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்டிருந்தபோது (மார்ச் 26-29), வடகிழக்கு இந்தியா நிலத்தால் சூழப்பட்டிருப்பதால், அந்தப் பிராந்தியத்திற்கு வங்கதேசம் தான் கடல் வழியின் "ஒரே பாதுகாவலர்" என்று கூறியிருந்தார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

இதனைத் தொடர்ந்து, வடகிழக்கு இந்தியாவில் சீனாவின் பொருளாதாரப் பங்களிப்பை பங்களாதேஷ் ஆதரித்தது போல் தோன்றிய நிலையில், பங்களாதேஷின் ஏற்றுமதி சரக்குகளுக்கான போக்குவரத்து வசதியை புதுடெல்லி நிறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை பூட்டான், நேபாளம் மற்றும் மியான்மர் உடனான பங்களாதேஷின் வர்த்தகத்தை பாதிக்கக்கூடும் என்று மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 8-ம் தேதி வெளியிட்ட தனது சுற்றறிக்கையில்,  “பங்களாதேஷிலிருந்து மூன்றாம் நாடுகளுக்கு நில சுங்க நிலையங்கள் (LCSs) வழியாக கொள்கலன்கள் அல்லது மூடப்பட்ட லாரிகளில் துறைமுகங்கள் அல்லது விமான நிலையங்களுக்கு ஏற்றுமதி சரக்குகளை அனுப்புவது” தொடர்பான ஜூன் 29, 2020 தேதியிட்ட தனது முந்தைய சுற்றறிக்கையை ரத்து செய்வதாக சி.பி.ஐ.சி (CBIC) தெரிவித்துள்ளது.

Advertisment
Advertisements

2020-ம் ஆண்டின் சுற்றறிக்கை, பூட்டான், நேபாளம் மற்றும் மியான்மர் போன்ற நாடுகளுக்கு பங்களாதேஷின் ஏற்றுமதி சரக்குகள் தடையின்றி செல்ல உதவும் வகையில், இந்திய நில சுங்க நிலையங்கள் வழியாக இந்திய துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு ஏற்றுமதி சரக்குகளை கொண்டு செல்ல அனுமதித்தது.

வடகிழக்கு இந்தியா குறித்து யூனுஸ் என்ன கூறினார்?

சீனாவுக்கான தனது நான்கு நாள் பயணத்தின்போது, பேராசிரியர் முகமது யூனுஸ், வடகிழக்கு இந்தியா நிலத்தால் சூழப்பட்டிருப்பதால், அந்தப் பிராந்தியத்திற்கு டாக்கா தான் கடல் வழியின் "ஒரே பாதுகாவலர்" என்று குறிப்பிட்டார். இது வடகிழக்கிற்கான அணுகலில் டாக்கா தனது செல்வாக்கை நிலைநாட்ட முயற்சிப்பதாக பரவலாகப் பார்க்கப்பட்டது - இது டெல்லிக்கு கவலை அளிக்கும் விஷயமாகும். பெய்ஜிங்கை ஒரு புதிய ராஜதந்திர பங்காளியாக சித்தரிக்க யூனுஸின் முயற்சிகள் ஏற்கனவே பலவீனமான இந்தியா- பங்களாதேஷ் உறவை மேலும் சிக்கலாக்கியுள்ளன.

“கிழக்கு இந்தியாவின் ஏழு மாநிலங்கள், 'ஏழு சகோதரிகள்' என்று அழைக்கப்படுகின்றன, அவை நிலத்தால் சூழப்பட்ட பிரதேசம். அவற்றுக்கு கடலுக்கு நேரடி நேரடியாக செல்ல வழி இல்லை” என்று யூனுஸ் கூறினார். “இந்த முழு பிராந்தியத்திற்கும் நாங்கள்தான் கடலின் ஒரே பாதுகாவலர். இது ஒரு பெரிய வாய்ப்பைத் திறக்கிறது. இது சீனப் பொருளாதாரத்தின் விரிவாக்கமாக மாறலாம் - பொருட்களை உருவாக்குதல், உற்பத்தி செய்தல், சந்தைப்படுத்துதல், பொருட்களை சீனாவுக்கு கொண்டு வருதல் மற்றும் உலகின் பிற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்தல்” என்றும் அவர் மேலும் கூறினார்.

புதிய சுற்றறிக்கை எதை உள்ளடக்கியது?

குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் (GTRI) என்ற சிந்தனைக் குழு, புதிய சுற்றறிக்கையின் மூலம், சரக்குப் போக்குவரத்து ஏற்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. இருப்பினும், முந்தைய முறையின் கீழ் இந்திய எல்லைக்குள் ஏற்கனவே நுழைந்த சரக்குகள், சுற்றறிக்கையின்படி, தற்போதுள்ள நடைமுறைகளின்படி வெளியேற அனுமதிக்கப்படும்.

முன்னாள் வர்த்தக அதிகாரி மற்றும் குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ்வின் (GTRI) தலைவர் அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், இந்தியா தொடர்ந்து பங்களாதேஷின் நலன்களை ஆதரித்து வந்துள்ளது மற்றும் கடந்த இரண்டு பத்தாண்டுகளாக பரந்த இந்திய சந்தைக்கு பங்களாதேஷின் பொருட்களுக்கு (மது மற்றும் சிகரெட் தவிர) ஒருவழி, பூஜ்ஜிய வரி அணுகலை வழங்கியுள்ளது.

“இருப்பினும், சீனாவின் உதவியுடன் சிக்கன்ஸ் நெக் பகுதிக்கு அருகில் ஒரு மூலோபாய தளத்தை நிறுவ பங்களாதேஷின் திட்டங்கள் இந்த நடவடிக்கையைத் தூண்டியிருக்கலாம். இந்தியாவின் சிலிகுரி காரிடார் அருகே உள்ள லால்மோனிர்ஹாட்டில் உள்ள விமான தளத்தை புத்துயிர் பெற வங்கதேசம் சீன முதலீட்டை அழைத்துள்ளது” என்று ஸ்ரீவஸ்தவா கூறினார்.

இந்த வசதியை திரும்பப் பெறுவது பங்களாதேஷின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தளவாடங்களை சீர்குலைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக மூன்றாம் நாடு வர்த்தகத்திற்காக இந்திய உள்கட்டமைப்பை நம்பியுள்ள பூட்டான், நேபாளம் மற்றும் மியான்மருடன். முந்தைய வழிமுறை இந்தியா வழியாக ஒரு நெறிப்படுத்தப்பட்ட பாதையை வழங்கியது, போக்குவரத்து நேரம் மற்றும் செலவைக் குறைத்தது. அது இல்லாமல், வங்காளதேச ஏற்றுமதியாளர்கள் இப்போது தளவாட தாமதங்கள், அதிகரித்த செலவுகள் மற்றும் அதிக நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ள நேரிடும்.

கூடுதலாக, நேபாளம் மற்றும் பூட்டான் - இரண்டும் நிலத்தால் சூழப்பட்ட நாடுகள் - பங்களாதேஷுக்கு மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து அணுகல் குறித்து கவலைகளை எழுப்பக்கூடும், குறிப்பாக இந்த நடவடிக்கை அந்த நாட்டுடனான அவர்களின் வர்த்தகத்தைத் தடுக்கக்கூடும்.

பங்களாதேஷின் யூனுஸுக்கு பதிலளித்த அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, அவரது அறிக்கையை "அவமதிப்பானது" மற்றும் "வலுவாக கண்டிக்கத்தக்கது" என்றும் கூறினார். யூனுஸின் அறிக்கை இந்தியாவின் உத்தி முக்கியத்துவம் வாய்ந்த 'சிக்கன் நெக்' சிலிகுரி காரிடார் தொடர்பான "நீண்டகால பாதிப்பு கதையை" அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று சர்மா எக்ஸ் தளத்தில் தெரிவித்தார். சிலிகுரி பாதை புறக்கணித்து மாற்று சாலை வழிகளை உருவாக்குவது உட்பட, இப்பகுதியை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் சிறந்த போக்குவரத்து வலையமைப்புகளை உருவாக்க சர்மா வாதிட்டார்.

அசாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, மிசோரம், திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய வடகிழக்கு மாநிலங்கள் கூட்டாக பங்களாதேஷுடன் 1,596 கிமீ நீளமுள்ள சர்வதேச எல்லையையும், சீனாவுடன் 1,395 கிமீ எல்லையையும், மியான்மருடன் 1,640 கிமீ எல்லையையும், பூட்டானுடன் 455 கிமீ எல்லையையும், நேபாளத்துடன் 97 கிமீ எல்லையையும் கொண்டுள்ளன. ஆனால் அவை 'சிக்கன் நெக்' சிலிகுரி காரிடார் எனப்படும் 22 கிமீ நீளமுள்ள நிலப்பகுதி வழியாக மட்டுமே இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் உலக வர்த்தக அமைப்பின் (WTO) கடமைகள்

இருப்பினும், இந்த முடிவு உலக வர்த்தக அமைப்பின் (WTO) விதிகள் தொடர்பான இந்தியாவின் கடமைகள் குறித்து கேள்விகளை எழுப்பக்கூடும் என்று ஸ்ரீவாஸ்தவா குறிப்பிட்டார். குறிப்பாக நிலத்தால் சூழப்பட்ட நாடுகளுக்கு பொருட்கள் சென்று வர போக்குவரத்து சுதந்திரத்தை WTO விதிகள் கட்டாயப்படுத்துகின்றன.

“உலக வர்த்தக அமைப்பின் (WTO) விதிகளின்படி, குறிப்பாக ஜி.ஏ.டி.டி (GATT) 1994-ன் V வது பிரிவின்படி, அனைத்து உலக வர்த்தக அமைப்பின் (WTO) உறுப்பினர்களும் நிலத்தால் சூழப்பட்ட நாடுகளுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் பொருட்களுக்கு போக்குவரத்து சுதந்திரத்தை அனுமதிக்க வேண்டும். இதன் பொருள் அத்தகைய போக்குவரத்து கட்டுப்பாடுகள் இல்லாமல், தேவையற்ற தாமதங்கள் இல்லாமல், போக்குவரத்து வரிகளுக்கு உட்படுத்தப்படாமல் இருக்க வேண்டும்” என்று ஸ்ரீவஸ்தவா விளக்கினார்.

மேலும், உலக வர்த்தக அமைப்பின் (WTO) வர்த்தக வசதி ஒப்பந்தத்தின் (TFA) 11 வது பிரிவு ஜி.ஏ.டி.டி (GATT)-ன் போக்குவரத்து விதிகளை வலுப்படுத்துகிறது மற்றும் நவீனப்படுத்துகிறது. இது வெளிப்படையான நடைமுறைகள், குறைக்கப்பட்ட ஆய்வுகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை அழைக்கிறது, அதே நேரத்தில் எல்லை தாண்டிய வர்த்தகத்தை எளிதாக்குவதற்கு உத்தரவாதங்கள் அல்லது பத்திரங்கள் போன்ற நடைமுறை தீர்வுகளை ஊக்குவிக்கிறது.

இந்த விதிகள் நேபாளம் மற்றும் பூட்டான் போன்ற நிலத்தால் சூழப்பட்ட நாடுகள் இந்தியா போன்ற அண்டை நாடுகளின் வழியாக உலக சந்தைகளுக்கு திறமையான மற்றும் நியாயமான அணுகலைப் பெறுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

Bangladesh

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: