Advertisment

எஸ்.பி.ஐ சேர்மன் பதவிக் காலம் நீட்டிப்பு? புதிய தகவல்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் தலைவர் தினேஷ் காராவின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு (2024) ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
New Update
SBIs chairman Dinesh Khara tenure extends

பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) தலைவர் தினேஷ் காரா

SBI chairman Dinesh Khara tenure extends: நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) தலைவர் தினேஷ் காராவின் (Dinesh Khara ) பதவிக் காலத்தை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை நீட்டித்துள்ளதாக இரண்டு அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதாவது, தினேஷ் காராவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு 63 வயதை அடையும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய அதிகாரிகள் தங்களின் பெயரை வெளியிட மறுத்துவிட்டனர்.

Advertisment

India extends tenure of SBI chairman until August 2024, says report

தினேஷ் காரா 2020 அக்.7ஆம் தேதியன்று எஸ்பிஐயின் தலைவராக மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். விதிமுறைகளின்படி, எஸ்பிஐ தலைவர் பதவியில் 63 வயது வரை இருக்க முடியும்.
இந்த நிலையில் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை விரைவில் அரசு வெளியிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இது தொடர்பான கேள்விகளுக்கு இந்தியாவின் நிதி அமைச்சகமும் எஸ்பிஐயும் உடனடியாக பதிலளிக்கவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment