/tamil-ie/media/media_files/uploads/2023/01/Adani-4.jpg)
இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானி அகமதாபாத்தில் உள்ள தனது அலுவலகத்தில் ராய்ட்டர்ஸுக்கு அளித்த பேட்டியின் போது பேசினார். (ராய்ட்டர்ஸ், கோப்பு படம்)
அதானி குழுமம் தனது நிறுவனங்களுக்கு எதிரான நியூயார்க்கை தளமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச் கடந்த வாரம் வைத்த குற்றச்சாட்டுகளை ஒரு அறிக்கையில் "இந்தியா மீதான திட்டமிடப்பட்ட தாக்குதல்" என்று குறிப்பிட்ட ஒரு நாளுக்குப் பிறகு, "நாங்கள் எழுப்பிய ஒவ்வொரு முக்கிய குற்றச்சாட்டையும் புறக்கணிக்கும் வகையில் தேசியவாதம் அல்லது மழுப்பிய பதிலால் மோசடியை மறைக்க முடியாது," என ஹிண்டன்பர்க் ரிசர்ச் திங்களன்று பதிலடி கொடுத்தது.
இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயகம் மற்றும் அற்புதமான எதிர்காலத்துடன் வளர்ந்து வரும் வல்லரசு என்று ஹிண்டன்பர்க் ரிசர்ச் நம்புவதைச் சுட்டிக்காட்டி, “தேசத்தை திட்டமிட்டு கொள்ளையடிக்கும் போது, இந்தியக் கொடியில் தன்னைப் போர்த்தியுள்ள அதானி குழுமத்தால், இந்தியாவின் எதிர்காலம் பின்னுக்குத் தள்ளப்படுவதாக நாங்கள் நம்புகிறோம்,” என்று ஹிண்டன்பர்க் கூறியது.
இதையும் படியுங்கள்: ’இந்தியா மீதான தாக்குதல்’; ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளுக்கு அதானி குழுமம் பதில்
அதானி குழுமத்திற்கு அளித்த பதிலில், அதானி குழுமம் "தேசியவாதக் கதையைத் தூண்டுவதன் மூலம் முக்கியப் பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப" முயற்சிப்பதாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் கூறியது.
Our Reply To Adani:
— Hindenburg Research (@HindenburgRes) January 30, 2023
Fraud Cannot Be Obfuscated By Nationalism Or A Bloated Response That Ignores Every Key Allegation We Raisedhttps://t.co/ohNAX90BDf
”சில மணிநேரங்களுக்கு முன்பு, அதானி குழுமம் ‘413 பக்க பதிலை’ வெளியிட்டது. "மேடாஃப்ஸ் ஆஃப் மன்ஹாட்டன்" என்ற பரபரப்பான கூற்றுடன் எங்களை அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இது கணிசமான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப முயன்றது மற்றும் அதற்கு பதிலாக ஒரு தேசியவாத கதையை தூண்டியது, எங்கள் அறிக்கை "இந்தியாவின் மீது கணக்கிடப்பட்ட தாக்குதல்" என்று கூறுகிறது. சுருக்கமாக, அதானி குழுமம் அதன் வானளாவிய வளர்ச்சி மற்றும் அதன் தலைவர் கௌதம் அதானியின் செல்வத்தை இந்தியாவின் வெற்றியுடன் இணைக்க முயற்சித்துள்ளது. நாங்கள் உடன்படவில்லை. தெளிவாகச் சொல்வதானால், இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயகம் மற்றும் அற்புதமான எதிர்காலத்துடன் வளர்ந்து வரும் வல்லரசு என்று நாங்கள் நம்புகிறோம். திட்டமிட்ட முறையில் தேசத்தை கொள்ளையடிக்கும் அதே வேளையில் இந்தியக் கொடியில் தன்னைப் போர்த்தியிருக்கும் அதானி குழுமத்தால், இந்தியாவின் எதிர்காலம் தடுக்கப்படுகிறது என்றும் நாங்கள் நம்புகிறோம்,” என்று ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறியது.
“எங்கள் அறிக்கை அதானி குழுமத்திடம் 88 குறிப்பிட்ட கேள்விகளைக் கேட்டது. அதன் பதிலில், அதானி குழுமம் 62 கேள்விகளுக்குக்கு குறிப்பாக பதிலளிக்கத் தவறிவிட்டது. அதற்கு பதிலாக, இது முக்கியமாக கேள்விகளை வகைகளில் ஒன்றாக தொகுத்து பொதுவான விலகல்களை வழங்கியது" என்று ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் கூறியது.
"முறைகேடான பங்கு கையாளுதல் மற்றும் கணக்கியல் மோசடி" என்று குற்றம் சாட்டிய 106 பக்க ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கைக்கு அளித்த 413 பக்க பதிலில், அதானி குழுமம், “இது வெறுமனே ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மீதான தேவையற்ற தாக்குதல் அல்ல, மாறாக இந்தியா, இந்திய நிறுவனங்களின் சுதந்திரம், ஒருமைப்பாடு மற்றும் தரம் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக் கதை மற்றும் லட்சியம் ஆகியவற்றின் மீதான திட்டமிடப்பட்ட தாக்குதலாகும்,” என்று கூறியது.
நியூயார்க் நிறுவனமான ஹிண்டன்பர்க்கின் அறிக்கை இரண்டு வர்த்தக அமர்வுகளில் அதானி குழுமம் 50 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான சந்தை மதிப்பை இழக்க வழிவகுத்தது மற்றும் தலைவர் கௌதம் அதானி 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது அவரது மொத்த செல்வத்தில் ஐந்தில் ஒரு பங்கை இழந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.