India Post introduces new facility for customers: இந்திய தபால் அலுவலகம் அதன் வாடிக்கையாளர்களுக்கு அருமையான செய்தியை தெரிவித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் இனி பல்வேறு சேவைகளுக்கு தபால் அலுவலக கிளைகளுக்கு அலைய வேண்டியதில்லை.
இந்திய அஞ்சல் அலுவலகம், அதன் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களின் வசதிக்காக, தொலைபேசி வாயிலான குரல் மூலம் பதிலளிக்கும் வாடிக்கையாளர் (IVR) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் ஃபோன்களில் இருந்து இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த சேவையின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் முதலீடு, ஏடிஎம் கார்டை தடை செய்தல், புதிய கார்டுகள் பெறுதல் மற்றும் பிபிஎஃப், என்எஸ்சி போன்றவற்றில் பெறப்பட்ட வட்டி பற்றிய தகவல்களைப் பெற இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம். இந்தச் சேவை நாட்டின் கிராமப்புறத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களுக்கு உதவும். அவர்கள் தங்கள் மொபைல் எண் மூலம் தேவையான தகவல்களை எளிதாகப் பெற முடியும்.
இந்தச் சேவையைப் பெற இந்திய அஞ்சல் அலுவலகம் இலவச எண்ணையும் வெளியிட்டுள்ளது. இப்போது இங்கிருந்து நீங்கள் PPF, NSC, சுகன்யா சம்ரித்தி அல்லது மற்ற திட்டங்களைப் பற்றிய விரிவான தகவல்களைப் பெறலாம். இதற்காக, வாடிக்கையாளர் தனது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து இந்திய அஞ்சல் சேவையின் இலவச எண்ணான 18002666868ஐ அழைக்க வேண்டும்.
தபால் அலுவலகத் துறையில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களும் IVR சேவையைப் பெறலாம். இதில் அவர்கள் அனைத்து விருப்பங்களையும் பெறுவார்கள். வாடிக்கையாளர்கள் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தகவல்களைப் பெறுவார்கள்.
இதையும் படியுங்கள்: சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம்; முக்கிய தகவல்
கணக்கு இருப்புத் தகவலைப் பெற ஐந்தாம் எண்ணை அழுத்த வேண்டும். ஏடிஎம் கார்டு சேவையை முடக்க 6ஐ அழுத்த வேண்டும். அதன் பிறகு நீங்கள் அட்டை எண்ணை உள்ளிட வேண்டும். அதன் பிறகு கணக்கு எண்ணை கொடுக்க வேண்டும்.
ஏடிஎம் தகவல்களுக்கு, 3ஐ அழுத்த வேண்டும். புதிய ஏடிஎம்மிற்கு 2ஐ அழுத்த வேண்டும். மீண்டும் கேட்க ஹாஷ் (#) விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும் மற்றும் முந்தைய மெனுவிற்கு செல்ல ஸ்டாரை அழுத்தவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil