பிரபல சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் வங்கி கணக்கு மோசடி என்று இந்தியன் வங்கி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 2006 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சரவணா ஸ்டோர்ஸ் (கோல்ட் பேலஸ்) சென்னையில் நகைகள் மற்றும் ஜவுளி விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய நகைக் கடை குழுமங்களில் ஒன்று சரவணா ஸ்டோர்ஸ்.
இந்த நிலையில், “சரவணா ஸ்டோர்ஸ-ன் (கோல்ட் பேலஸ்) செயல்படாத வங்கி கணக்கு (என்.பி.ஏ) மோசடி வங்கி கணக்கு என அறிவிக்கப்படுகிறது. ஒழுங்குமுறை தேவைக்கேற்ப ரிசர்வ் வங்கிக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் தெரிவிகிறோம்” என்று இந்தியன் வங்கி ஒழுங்குமுறை விதிகள் அறிவிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.
மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் வங்கி புதன்கிழமை சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் வங்கி கணக்கு செயல்படாத வங்கி கணக்கு என்றும் அதில் ரூ.231 கோடி பாக்கி உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியன் வங்கி ஒழுங்குமுறை விதிகள் அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “சரவணா ஸ்டோர்ஸ் (கோல்ட் பேலஸ்) செயல்படாத வங்கி கணக்கு (என்.பி.ஏ) மோசடி என அறிவிக்கப்படுகிறது. ஒழுங்குமுறை தேவைக்கேற்ப ரிசர்வ் வங்கிக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் தெரிவிகிறோம” என்று கூறியுள்ளது.
இந்த வங்கி கணக்கின் மோசடி தன்மை நிதிகளை திருப்பிவிடுவதாக அமைந்துள்ளது. சரவணா ஸ்டோர்ஸ் வங்கி கணக்கில் ரூ.230.74 கோடி பாக்கி உள்ளது.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்தியன் வங்கி, ஏற்கனவே இந்த வங்கிக் கணக்குக்கு 115.32 கோடி ஒதுக்கியுள்ளது.
சென்னையின் வணிக மையமான தி. நகரில் உள்ள சரவானா ஸ்டோர்ஸ்க்கு (கோல்ட் பேலஸ்) சொந்தமான இரண்டு அசையா சொத்துக்களின் விற்பனை அறிவிப்பை மார்ச் மாதத்தில் இந்தியன் வங்கி வெளியிட்டது. அதன் பங்குதாரார்கள் உத்தரவாதம் அளித்தவர்கள் மற்றும் உரிமை வைத்திருப்பவர்களிடமிருந்து ரூ.288 கோடி நிலுவைத் தொகையை வசூலிக்க வேண்டும் என்பதற்காக அறிவித்தது.
தமிழகத்தின் பிரபலமான சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் வங்கிக் கணக்கு மோசடியான வங்கி கணக்கு என்று இந்தியன் வங்கி அறிவித்திருப்பது பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”