indian bank fd rate : இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த சேமிப்பு வழிகளில் ஒன்று பிக்சட் டெபாசிட். குறிப்பாக சீனியர் சிட்டிசன்களின் லைக் லிஸ்டில் இது நிச்சயம் இடம் பிடித்திருக்கும். அதைவிட முக்கியம் சேமிக்க நினைப்பவர்களுக்கு குறைந்த காலத்தைக் கொண்ட (6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை) பிக்சட் டெபாசிட்டுக்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு.
பொருளாதார பண வீக்கம் குறைந்ததும், வட்டி விகிதம் அதிகரித்து நிலையான வைப்புகள் (பிக்சட் டெபாசிட்) மீது மக்களின் கவனத்தை திருப்பியது. 1 வருட பிக்சட் டெபாசிட்டுக்கு 8% வட்டியை வங்கிகள் அளிக்கின்றன. அதிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு 8.5% வட்டி கொடுக்கப்படுகிறது.
சரி எந்தெந்த வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு எவ்வளவு வட்டி விகிதம் என்பது குறித்த விளக்கம் இதோ.
1 வருட பிக்சட் டெபாசிட் திட்டங்கள்:
இண்டஸின்ட் வங்கி – 8%, ஆர்.பி.எல் வங்கி 8% , லட்சுமி விலாஸ் வங்கி – 7.6% , கர்நாடக வங்கி 7.5% , சிட்டி யூனியன் வங்கி 7.35% .
2 வருட பிக்சட் டெபாசிட் திட்டம்
ஏ.யூ.ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி – 8.25% , ஆர்.பி.எல் வங்கி 8.05% , லட்சுமி விலாஸ் வங்கி 7.6% , சவுத் இந்தியன் வங்கி – 7.6% , ஆக்ஸிஸ் வங்கி – 7.5%
3 வருட பிக்சட் டெபாசிட் :
ஏ.யூ.ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி – 8.5%, டி.சி.பி வங்கி – 8.05%, ஐ.டி.எஃப்.சி வங்கி 8% , லட்சுமி விலாஸ் வங்கி – 7.75% , சவுத் இந்தியன் வங்கி 7.6% , 5 வருட ஃபிக்ஸட் டெபாசிட், ஐ.டி.எஃப்.சி வங்கி 8.25%, ஏ.யூ.ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி – 8% டி.சி.பி வங்கி – 7.75% லட்சுமி விலாஸ் வங்கி – 7.75% ஆர்.பி.எல் வங்கி – 7.6%
அவசரமாக கடன் வேண்டுமா? நீங்கள் செல்ல வேண்டிய இடம் ஐசிஐசிஐ ஏடிஎம்!