indian bank gold loan ib gold loan indianbank : இந்த நேரத்தில் இந்த தகவல் உங்களுக்கு கண்டிப்பாக உதவும். இந்த கொரோனா காலத்தில் கஷ்டப்படாத குடும்பங்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு பலரின் வாழ்வையும் கொரோனா புரட்டி போட்டுள்ளது. அதிலும் மிடில் கிளாஸ் குடும்பங்கள் பற்றி கேட்கவே வேண்டாம்.
போதாத குறைக்கு வட்டி இஎம்ஐ.. இருக்குற நகையை வச்சி எப்படியாவது மொத்த கடனையும் கட்டி முடித்து விடலாம்ன்னு நினைக்கிறவங்க இந்த தகவலை படியுங்க. அதிலும் நீங்க விவசாயிகளாக இருந்தால் கேட்கவே வேண்டாம்.
indian bank gold loan ib gold loan indianbank :சூப்பர் நியூஸ் இருக்கு!
விவசாயிகளுக்கு வழங்கப்படும் தங்கக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை இந்தியன் வங்கி குறைத்துள்ளது. பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி விவசாயிகளுக்காக ‘பம்பர் அக்டி ஜுவெல்’ என்ற குறுகிய கால தங்கக் கடன் திட்டத்தை உருவாக்கி சேவை செய்து வருகிறது.இத்திட்டத்தின் கீழ் 7.5 விழுக்காடு வட்டி விகிதத்தில் தங்கக் கடன் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது இத்திட்டத்திற்கான வட்டி விகிதம் 7 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜூலை 22ஆம் தேதி முதல் வழங்கப்பட்ட தங்கக் கடன்களுக்கு 7 விழுக்காடு வட்டி மட்டுமே வசூலிக்கப்படும். அதாவது ரூ.1 லட்சம் கடனுக்கு மாதம் ரூ.583 வட்டி செலுத்தினால் மட்டும் போதுமானது” என்று தெரிவித்துள்ளது.
இந்தியன் வங்கியின் விவசாய தங்கக் கடன் திட்டத்தின் கீழ், தங்க நகையின் ஒட்டுமொத்த மதிப்பில் 85 விழுக்காடு கடன் தொகையாக வழங்கப்படுகிறது. ஆறு மாத தவணைகளாக கடனைத் திருப்பிச் செலுத்தலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil