பிரபல வங்கியின் முக்கிய அறிவிப்பு... இனி IFSC எண் செயல்படாதாம்!

பழைய IFSC code வைத்து இனி பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பழைய IFSC code வைத்து இனி பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sbi sbi card sbi atm card sbi state bank card

indian bank ifsc ib ifsc code indianbank

indian bank ifsc ib ifsc code indianbank : 10 பொதுத் துறை வங்கிகளை நான்கு பொதுத் துறை வங்கிகளாகப் பெரும் இணைப்பு செய்வதற்குப் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

Advertisment

அதன்படி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யுனைடெட் பேங்க் ஆப் இண்டியா ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும்,

சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியுடனும்,

ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை யூனியன் பேங்க் ஆப் இண்டியாவுடனும்,

Advertisment
Advertisements

அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கியுடனும் இணைக்கப்பட்டு வருகின்றன

இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்பட்டுள்ள நிலையில், நான்கு விஷயங்கள் மாறியுள்ளன.

1. அலகாபாத் வங்கியின் IFSC code

2. ’emPower’ என்ற மொபைல் பேங்கிங் ஆப் இப்போது ‘IndOASIS’ என்று மாறியுள்ளது.

3. நெட் பேங்கிங்

4. செக் புக் மற்றும் பாஸ் புக்

பிப்ரவரி 15ஆம் தேதி முதல் அலகாபாத் வங்கியின் IFSC code அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது. பழைய IFSC code வைத்து இனி பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் வங்கியின் www.indianbank.in/amalgamation என்ற முகவரியில் லாகின் செய்து, பழைய IFSC code டைப் செய்து புதிய IFSC code மாற்றிக்கொள்ளலாம். எஸ்.எம்.எஸ். மூலமாகவும் வாடிக்கையாளர்கள் புதிய IFSC code பெற முடியும். IFSC OLD IFSC என டைப் செய்து 9266801962 என்ற நம்பருக்கு உங்களது பதிவுசெய்யப்பட்ட மொபைல் நம்பரிலிருந்து எஸ்.எம்.எஸ். அனுப்பினால் புதிய IFSC code பெற முடியும்

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: