Indian bank loan : கடன் திட்டங்களில் இந்தியன் வங்கி தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளது. இந்தியன் வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த பெர்சனல் லோன் திட்டங்கள் இதோ உங்களுக்காக.
பொதுவாக, கார் அல்லது வீடு வாங்க சில லட்ச ரூபாய் குறையும் போது மீதிப் பணத்துக்காக கடன் கேட்டு வங்கியை அணுகினால் கார் அல்லது வீட்டை அடமானமாகக் காட்ட வேண்டி வரும்.
கடனைச் சரியாக கட்டவில்லை என்றால் அடமானம் வைக்கப்பட்டிருப்பதை வங்கி தன் வசம் எடுத்துக் கொள்ளும். இதைத் தவிர்க்க விரும்புபவர்கள் பெர்சனல் லோனைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். அதே சமயம் மற்ற கடனைவிட இதற்கு வட்டி மிக அதிகம். எனவே பெர்சனல் லோன் வாங்குவதை கடைசி முயற்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
கார் வாங்க நினைப்பவர்களுக்கு இது பொன்னான நேரம்.. எஸ்பிஐ அறிவிப்பை படிங்க!
1.பொதுவாக, இந்தக் கடனுக்கு 14-22% வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்தியன் வங்கி, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, போன்ற வங்கிகள் 1 லட்சம் வரைக்கும்தான் பெர்சனல் லோனை எந்த காரணமும் கேட்காமல் தருகின்றன.
2. ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எஸ்.பி.ஐ. போன்றவை 10 லட்சம் வரைதான் கடன் தரும். அதற்கு மேல் தேவைப்பட்டால் சிட்டி பேங்க், ஹெச்.டி.எஃப்.சி., ஆர்.பி.எஸ். போன்றவற்றைத் தொடர்பு கொள்ளலாம்.
3. பெர்சனல் லோன் வாங்கக் குறைவான ஆவணங்கள் கொடுத்தால் போதும். இருப்பிடம், வருமானம் போன்றவற்று க்கு ஆதாரம் கொடுக்க வேண்டும். மூன்று நாட்களில் கடன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. 12-48 மாதங்களில் கடனைத் திரும்பக் கட்டலாம்.
4. மேலே கூறப்பட்டுள்ள திட்டங்களில் நீங்கள் கடன் வாங்க விருப்பமிருந்தால் போது, இந்தியன் வங்கியின் சேவை எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். அப்படி நீங்கள் தொடர்பு கொண்டு விளக்கினால் உங்கள் வீடு தேடி வங்கி நிர்வாகி வந்து ஒரே நாளில் லோன் பெறுவதற்கான அனைத்து வேலையையும் அன்றே முடித்து விடுவார்.