indian bank net banking : இந்தியன் வங்கி சார்பில் மிகவும் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுவசதி, வாகனக் கடன்கள் வழங்கப்படுகின்றன.வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து அவர்களுக்கு வழங்கும் கடன் திட்டங்களில் இந்தியன் வங்கி தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளது. இந்தியன் வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த பெர்சனல் லோன் திட்டங்களை குறித்து இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
ரிசர்வ் வங்கியின் பரிந்துரைப் படி, இந்தியன் வங்கி ரெபோ வட்டி விகிதத்தை தனது சொத்து சார்ந்த திட்டங்களுக்கு அமல்படுத்துகிறது. இதன் தொடர்ச்சியாக வீட்டு வசதிக் கடன், வாகனக் கடன் ஆகியவற்றுக்கான ஆர்பிஎல்ஆர் வட்டி விகிதம் செப்டம்பர் 4-ம் தேதி அமலுக்கு வந்துள்ளது. ஆர்பிஎல்ஆர் விகிதம் தற்போது ஆண்டுக்கு 8.20% என்ற அளவில் உள்ளது.
எனவே, வீட்டுவசதிக் கடன் களை ஆண்டுக்கு 8.20% என்ற வட்டி விகிதத்தில் பெறலாம். நான்கு சக்கர வாகனங்களுக்கான கடன் களை ஆண்டுக்கு 8.85% என்ற வட்டி விகிதத்தில் பெற்றுக் கொள்ளலாம். இது சந்தையிலேயே மிகவும் குறைந்த வட்டி விகிதமாகும்.
இந்தியன் ஓவர்சீஸ் வாடிக்கையாளர்களுக்கு நல்ல காலம் பொறந்தாட்சி!
வீட்டு வசதிக் கடனை திரும்ப செலுத்துவதற்கான அதிகபட்ச வரையறை 30 ஆண்டுகள் ஆகும். அதிகபட்ச உச்ச வரம்பு இல்லை. 2020 ஜனவரி 31-ம் தேதி வரை விண்ணப்ப மதிப்பீட்டுக்கான கட்டணம் கிடையாது. வாகனக் கடனைப் பொருத்தவரை, புதிய நான்குசக்கர வாகனங்கள் வாங்க கடன் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை கடன் பெறலாம். அதிகபட்சமாக 84 மாதங்களில் திரும்பச் செலுத்தலாம்.