indian bank netbanking : வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து அவர்களுக்கு வழங்கும் கடன் திட்டங்களில் இந்தியன் வங்கி தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளது. இந்தியன் வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த பெர்சனல் லோன் திட்டங்களை குறித்து இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
பொதுவாக, கார் அல்லது வீடு வாங்க சில லட்ச ரூபாய் குறையும் போது மீதிப் பணத்துக்காக கடன் கேட்டு வங்கியை அணுகினால் கார் அல்லது வீட்டை அடமானமாகக் காட்ட வேண்டி வரும்.
கடனைச் சரியாக கட்டவில்லை என்றால் அடமானம் வைக்கப்பட்டிருப்பதை வங்கி தன் வசம் எடுத்துக் கொள்ளும். இதைத் தவிர்க்க விரும்புபவர்கள் பெர்சனல் லோனைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். அதே சமயம் மற்ற கடனைவிட இதற்கு வட்டி மிக அதிகம். எனவே பெர்சனல் லோன் வாங்குவதை கடைசி முயற்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
1.பொதுவாக, இந்தக் கடனுக்கு 14-22% வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்தியன் வங்கி, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, போன்ற வங்கிகள் 1 லட்சம் வரைக்கும்தான் பெர்சனல் லோனை எந்த காரணமும் கேட்காமல் தருகின்றன.
2. ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எஸ்.பி.ஐ. போன்றவை 10 லட்சம் வரைதான் கடன் தரும். அதற்கு மேல் தேவைப்பட்டால் சிட்டி பேங்க், ஹெச்.டி.எஃப்.சி., ஆர்.பி.எஸ். போன்றவற்றைத் தொடர்பு கொள்ளலாம்.
கடன் வட்டி குறைப்பு.. மினிமல் பேலன்ஸ் பிரச்சனைக்கு தீர்வு! எஸ்பிஐ புதிய அறிவிப்புகள்
3. பெர்சனல் லோன் வாங்கக் குறைவான ஆவணங்கள் கொடுத்தால் போதும். இருப்பிடம், வருமானம் போன்றவற்று க்கு ஆதாரம் கொடுக்க வேண்டும். மூன்று நாட்களில் கடன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. 12-48 மாதங்களில் கடனைத் திரும்பக் கட்டலாம் என்றும் கூறப்படுகிறது.