விவசாயிகளுக்கு இக்கட்டில் உதவும் இந்தியன் வங்கி: புதிய கடன் திட்டங்களை கவனித்தீர்களா?

Indian Bank Corona Loan: கோவிட் சகாய கடன்’ (SHG Covid Sahaya Loan) சிறப்பு கடன் தொகுப்பின் கீழ் சுய உதவிக் குழு பெண் உறுப்பினர்கள் தலா ரூபாய் 5,000/- பெற்றுக் கொள்ளலாம்.

By: Updated: April 13, 2020, 08:12:54 PM

Indian Bank News In Tamil: பேரச்சம் ஊட்டுகிற கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியின் போது விவசாயிகள், கோழி வளர்ப்பவர்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் ஆகியோருக்கு உதவுவதற்காக இந்தியன் வங்கி மூன்று புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

IND கோவிட் அவசர வேளான் செயலாக்க கடனின் (IND Covid Emergency Agro-Processing Loan) கீழ் வேளான் செயலாக்க அலகுகள் மூலதன (working capital) வரம்பில் 10 சதவிகிதத்தை பெறலாம்.

Indian Bank Corona Loan: இந்தியன் வங்கி விவசாயக் கடன்

IND கோவிட் அவசர கோழி வளர்ப்பு கடன் திட்டத்தின் கீழ் கோழி வளர்ப்புத் தொழிலுக்காக (layer/breeder/broiler) கடன் பெற்றுள்ளவர்கள், மூலதன வரம்பில் 20 சதவிகிதத்தை பெறலாம்.

அதே போல் IND KCC கோவிட் Sahaya கடன் (IND KCC Covid Sahaya Loan) திட்டத்தின் கீழ் கிஸான் கடன் அட்டை (Kissan Credit Card) வசதியுள்ள பயிர் செய்யும் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் 10 சதவிகித வரம்பை soft loan ஆகப் பெறலாம், என இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது. இந்த கடன்களை 6 மாத கால அவகாசத்தில் சுலப தவனைகளில் திரும்ப செலுத்தலாம்.

இதுதவிர ’சுய உதவிக் குழு கோவிட் சகாய கடன்’ (SHG Covid Sahaya Loan) சிறப்பு கடன் தொகுப்பின் கீழ் சுய உதவிக் குழு பெண் உறுப்பினர்கள் தலா ரூபாய் 5,000/- பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு 20 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சுய உதவிக் குழு ரூபாய் 1,00,000/- வரை soft loan ஆகப் பெற்றுக் கொண்டு சுலப தவனைகளில் திரும்ப செலுத்தலாம்.

கோவிட் -19 விவசாயிகள் மற்றும் முறைசாரா தொழிலாளர்களையும் பாதித்துள்ளது. உணவு மற்றும் வேளான் செயலாக்க நிறுவனங்கள் பணப் புழக்கத்தில் சரிவைக் கண்டுள்ளன. விவசாயிகள் தங்கள் நிலத்தில் வேலை செய்வதற்கு, தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பதற்கு, அத்தியாவசிய இடுப்பொருட்களை வாங்குவதற்கும் சந்தைகளை அனுகுவதில் சிரமத்தை சந்திக்கின்றனர். இதனால் அவர்களிடம் பணப்புழக்கம் இல்லை. தங்கள் உற்பத்தி பொருட்கள் குறித்து மக்கள் மத்தியில் பரவியுள்ள போலி செய்திகளால் கோழி வளர்ப்புத் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Coronaviruscovid 19indian bankpoultryfarmers

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X