Advertisment

இந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்

இந்தியன் வங்கி, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, 1 லட்சம் வரை பெர்சனல் லோனை எந்த காரணமும் கேட்காமல் தருகின்றன. இந்தக் கடனுக்கு 14-22% வட்டி வசூலிக்கப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Personal Loans interest rates compared SBI, PNB, HDFC

Personal Loans interest rates compared SBI, PNB, HDFC

கடன் திட்டங்களை வழங்குவதில், இந்தியன் வங்கி தனக்கென தனிஇடத்தை பெற்றுள்ளது. அந்த வகையில் இந்தியன் வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த பெர்சனல் லோன் திட்டங்கள் இதோ உங்களுக்காக....

Advertisment

பொதுவாக, கார் அல்லது வீடு வாங்க சில லட்ச ரூபாய் குறையும் போது மீதிப் பணத்துக்காக வங்கிகளில் கடன் பெறும் போது, கார் அல்லது வீட்டை அடமானமாக காட்ட வேண்டியிருக்கும். மேலும் கடனை சரியாக செலுத்தவில்லை என்றால் அடமானம் வைக்கப்பட்டிருப்பதை வங்கி தன்வசம் எடுத்துக் கொள்ளும். இதை தவிர்க்க விரும்புபவர்கள் பெர்சனல் லோனைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். அதே சமயம் மற்ற கடனைவிட இதற்கு வட்டி மிக அதிகம்.

1. இந்தியன் வங்கி, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, போன்ற வங்கிகள் 1 லட்சம் வரைக்கும்தான் பெர்சனல் லோனை எந்த காரணமும் கேட்காமல் தருகின்றன. இந்தக் கடனுக்கு 14-22% வட்டி வசூலிக்கப்படுகிறது.

2. ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எஸ்.பி.ஐ. போன்றவை 10 லட்சம் வரைதான் கடன் தரும். அதற்கு மேல் தேவைப்பட்டால் சிட்டி பேங்க், ஹெச்.டி.எஃப்.சி., ஆர்.பி.எஸ். போன்றவற்றை நாட வேண்டும்.

3. குறிப்பாக பெர்சனல் லோன் வாங்க குறைவான ஆவணங்களை கொடுத்தால் போதும். இருப்பிடம், வருமானம் போன்றவற்றிற்கு ஆதாரம் கொடுக்க வேண்டும். மூன்று நாட்களில் கடன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. 1 முதல் 4 வருடங்களில் கடனை திரும்ப செலுத்தலாம்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment