பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் வங்கி இந்த் சூப்பர் 400 மற்றும் இந்த் சுப்ரீம் 300 நாள்கள் ஆகிய ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகிறது.
இந்தத் திட்டங்களின் காலக்கெடு பிப்.2,2024ஆம் ஆண்டோடு நிறைவுற இருந்த நிலையில், திட்டத்தின் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த் சூப்பர் 400 நாள்கள் திட்டம்
இந்தப் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் பொதுமக்களுக்கு 7.25 சதவீதமும், மூத்தக் குடிமக்களுக்கு 7.75 சதவீதமும், சிறப்பு மூத்தக் குடிமக்களுக்கு 8 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.
இந்த் சூப்பர் 300 நாள்கள்
இந்தத் திட்டத்தில் சாதாரண மக்கள் 7.05 சதவீதமும், மூத்தக் குடிமக்கள் 7.55 சதவீதமும், சிறப்பு மூத்தக் குடிமக்கள் 7.80 சதவீதமும் வட்டி வழங்குவார்கள்.
இந்தத் திட்டத்தில் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.2 கோடிக்குள் டெபாசிட் செய்யலாம்.
இந்தியன் வங்கி எஃப்.டி வட்டி விகிதங்கள்
இந்தியன் வங்கி 2.80 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. பொதுவாக மூத்தக் குடிமக்கள் 0.50 சதவீதம் வரை அதிக வட்டி பெறுவார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“