இந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் நலனே முக்கியம்! பிரமிக்க வைத்த இந்தியன் வங்கி

Indian Bank Tamil News: இந்தியன் வங்கி மொபைல் ஆப் பயன்படுத்தாத வாடிக்கையாளர் உடனடியாக டவுன்லோட் செய்து மேலே குறிப்பிட்டுள்ள வசதிகளை பெறலாம்.

indian bank
Indian Bank Online, Indian Bank Mobile App, Indian Bank Corona Offers, இந்தியன் வங்கி, இந்தியன் வங்கி ஆன்லைன்

Indian Bank Corona Alerts: வாடிக்கையாளர்கள் கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்தியன் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது

உலகம் முழுவதும் கொரானோ எதிரோலியால் வங்கி சேவைகள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. இருந்த போதும் வாடிக்கையாளர்கள் நலனே முக்கியம் என்ற நோக்கில் எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கிகள் போன்றவை கடன் உதவி திட்டம், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் கூடுதல் சிறப்பமசங்கள் என மிகச் சிறந்த சேவையை பொதுமக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது.


அந்த வகையில் தற்போது இந்தியன் வங்கி வெளியிட்டிருக்கும் புதிய அறிவிப்புகள் தான் இது.

* இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் பொது இடங்களில் உள்ள ஏடிஎம்களுக்கு செல்ல வேண்டாம்.

* மேலும், பில் கட்டணம், ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றை நேரடியாக செலுத்த வேண்டிய தேவையில்லை. பதிலுக்கு வீட்டில் இருந்தபடியே இன்டெர்நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, பீம் ஆகியவற்றில் பண பரிவர்த்தனை செய்யலாம்.

*அதற்கான வசதிகள் இந்தியன் வங்கி ஆன்லைன், மொபைல் ஆப்பில் செய்யப்பட்டுள்ளது.

*நேரடி பண பரிவர்த்தனையை வாடிக்கையாளர்கள் தவிர்த்து, டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள வேண்டும் என வங்கி தரப்பில் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.

*இதுவரை இந்தியன் மொபைல் ஆப் பயன்படுத்தாமல் இருந்த வங்கி வாடிக்கையாளர்கள் உடனடியாக டவுன்லோட் செய்து மேலே குறிப்பிட்டுள்ள வசதிகளை பெறலாம்.

*மேலும், இந்தியன் வங்கி மொபைல் ஆப் மூலம் தடையற்ற மற்றும் பாதுகாப்பான பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளுவும் வழிவை செய்யப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

 

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Indian bank tamil news indian bank corona alerts and ib mobile app

Next Story
கொரோனாவுக்காக எஸ்பிஐ-யின் மிகப்பெரிய அறிவிப்பு! நீங்கள் எதிர்பார்த்தீர்களா?SBI State bank of india atm
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express