வட்டியில்லா கடன் வேண்டுமா?

கடன் மூன்று நாட்களில் கிடைக்க வாய்ப்புள்ளதென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கடன் மூன்று நாட்களில் கிடைக்க வாய்ப்புள்ளதென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
indian bank

Indian Bank Online, Indian Bank Mobile App, Indian Bank Corona Offers, இந்தியன் வங்கி, இந்தியன் வங்கி ஆன்லைன்

indian bank : இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவு செய்வதில் தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளது.இந்நிலையில், இந்தியன் வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த பெர்சனல் லோன் திட்டங்களை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

தற்போதுள்ள நடைமுறையில் கார் அல்லது வீடு வாங்க பணம் குறையும் போது மீதிப் பணத்தை கடனாக வஙகியில் பெறப்போகும் போது கார் அல்லது வீட்டை அடமானமாகக் காட்ட வேண்டும்.வங்கியில் பெற்ற கடனைச் சரியாக கட்டவில்லை என்றால் அடமானம் வைக்கப்பட்டிருக்கும் கார் அல்லது வீட்டை வங்கி தன் வசம் எடுத்துக் கொள்ளும்.

இந்நிலையைத் தவிர்க்க சிலர் பெர்சனல் லோனைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் ஏனைய கடனை விட இதற்கு வட்டி மிக அதிகம். எனவே பெர்சனல் லோன் வாங்குவதை கடைசி முயற்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

1.பொதுவாக 14-22% வட்டி பெர்சனல் லோனுக்கு வசூலிக்கப்படுகிறது. யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி, போன்ற வங்கிகள் 1 லட்சம் வரைக்கும்தான் பெர்சனல் லோனை எந்த நிபந்தனையும் இன்றி வழங்கும்.

Advertisment
Advertisements

2. ஆக்ஸிஸ் பேங்க், எஸ்.பி.ஐ. ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், போன்றன 10 லட்சம் வரைதான் கடன் தரும். அதிகமாக பணம் தேவைப்பட்டால் சிட்டி பேங்க், ஹெச்.டி.எஃப்.சி., ஆர்.பி.எஸ். போன்றவற்றை நாடலாம்.

3. மேலும் இந்தக்கடனை பெற குறைவான ஆவணங்கள் கொடுத்தால் போதும். இருந்தும் இருப்பிடம், வருமானம் போன்றவற்று க்கு ஆதாரம் கொடுக்க வேண்டும். 12 முதல் 48 மாதங்களில் கடனைத் திரும்பக் கட்டலாம் என்று கூறப்படுகின்றது. இந்த கடன் மூன்று நாட்களில் கிடைக்க வாய்ப்புள்ளதென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: