நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜட்-ஐ தாக்கல் செய்த நிலையில், இந்திய தொழில் வர்த்தக சபை கோயம்புத்தூர் சார்பில் இன்று வெளியான மத்திய பட்ஜெட் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அந்த சந்திப்பை தொடர்ந்து நிர்வாகிகள் பட்ஜெட்டின் சாதகம் பாதகங்களை தெரிவித்தனர். இதுகுறித்து இந்திய தொழில் வர்த்தக சபையின் கௌரவச் செயலாளர் அண்ணாமலை கூறும் போது. “இந்த நிதிநிலை அறிக்கையில் சிறு சிறு குறைகள் இருந்தாலும் ஒட்டு மொத்தத்தில் வரவேற்கத்தக்கது.
பைனான்சியல், ஸ்டாக் மார்க்கெட், பேங்கிங், இன்சூரன்ஸ் போன்ற துறைக்கு இந்த பட்ஜெட்டில் ஒன்றும் அறிவிப்பு வரவில்லை.
கே. ஒய். சி.,யில் சிங்கிள் ரெகுலேஷன் ஆக்கி உள்ளார்கள் அது வரவேற்கத்தக்கது. விவசாயம் மற்றும் விவசாய உற்பத்தியை அதிகரிப்பதற்கு இந்த பட்ஜெட் உதவும்.
சிறுதானியங்களுக்கு மால் கட்ட வேண்டும் என இந்த பட்ஜெட்டில் தெரிவித்துள்ளனர். கார்ப்பரேட் டேக்ஸை பொருத்தவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.குறைக்கவும் இல்லை அறிவிப்பும் இல்லை. தனிநபர் வருமான வரி வரவேற்கிறோம்.
மூலப்பொருள் விலையை கட்டுப்படுத்த இந்த பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வரவில்லை. அதேபோல ஏற்றுமதி இறக்குமதி பற்றியும் அறிவிப்பு இல்லை. ஜிஎஸ்டியின் எதிரொலிதான் மூலப்பொருள் கட்டுப்பாடு இல்லாதது. ஜி.எஸ்.டி குறைக்க வேண்டும்.
மொத்தத்தில் மூலப்பொருள் தொடர்பாக வெளிவராத அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. இந்த பட்ஜெட் மூலம் பல்வேறு துறையில் உள்ளவர்களுக்கு உள்ள சிறு சிறு பிரச்சனைகள் சரி செய்யப்பட்டுள்ளது.
இது விவசாயிகள் சார்ந்த நிதிநிலை அறிக்கை. சாதாரண மாத வருமானம் வாங்கும் பணியாளர்களுக்கான பட்ஜெட்.
தொழில்துறையைப் பொறுத்தவரை ஏமாற்றம் என்றும் சொல்ல முடியாது எதிர்பார்த்தது கிடைத்தது என்றும் சொல்ல முடியாது. இவ்வாறு தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து துணைத் தலைவர் சுந்தரம் கூறும்போது.
இந்த பட்ஜெட்டில் ஜிஎஸ்டியிலும் மூலப் பொருட்கள் விலை கட்டுப்பாட்டிலும் நடவடிக்கை எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
சிறுகுறு தொழில்களுக்கு இந்த பட்ஜெட் மூலம் ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.
அரசு சிறுகுறு நடுத்தர தொழில்களுக்கு ஸ்பெண்டிங் அதிகளவு பண்ண வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம் அது இந்த பட்ஜெட்டில் நடந்துள்ளது.
தொழில்துறைக்கான கடன்களுக்கு நிதிகள் ஒதுக்கி உள்ளனர்.
மூலப்பொருள் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக தொழில் துறை நிதியை அதிகரித்துள்ளனர். இதனை திருப்திகரமான பட்ஜெட்டாக பார்க்கிறோம்.
மத்திய பட்ஜெட்டுக்கு மொத்தமாக “100க்கு”70” சதவீதம் மட்டுமே பட்ஜெட் கோட்பாடுகள் பொருந்தி உள்ளது என இந்திய தொழில் வர்த்தக சபையினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் பி.ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/