நாட்டில் சுய தொழில் அதிகரிப்பு.. ஜி.டி.பி. 6.8 ஆக உயரும்.. பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
நாட்டின் வரவு செலவு திட்ட நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) 2023க்கு முன்னதாக, இந்திய பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டுக்கு முந்தைய பொருளாதார ஆய்வறிக்கையை இன்று (ஜன.31) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்தப் பொருளாதார ஆய்வறிக்கையில், FY24க்கான நாட்டின் GDP வளர்ச்சியை 6- 6.8% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
Advertisment
இது, இலக்கை விட அதிகமான பணவீக்கம், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவற்றைப் பற்றி கணக்கெடுப்பு எச்சரித்தாலும், அடுத்த நிதியாண்டில் இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பொருளாதார ஆய்வறிக்கையை தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி ஆனந்த நாகேஸ்வரன் தயாரித்துள்ளார். இது குறிதது அவர் கூறுகையில், “இந்தியாவின் இறக்குமதி மற்றும் வெளிநாட்டு கடன் விகிதங்கள் முக்கியமல்ல.
இந்தியாவின் நீண்டகால பழமைவாத வெளிநாட்டுக் கடன் வாங்கும் கொள்கைகள்தான் கவலைக்குரியது” என்றார்.
மேலும் வேலைவாய்ப்பில், சுயதொழில் செய்பவர்களின் பங்கு அதிகரித்துள்ளது. வழக்கமான ஊதியம் அல்லது சம்பளம் பெறும் தொழிலாளர்களின் பங்களிப்பு 2020-21 ல் 2019-20 ஐ விட குறைந்துள்ளது. இது கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள போக்குகளால் உந்தப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “இந்தியப் பொருளாதாரம் இந்த தசாப்தத்தில் சிறப்பாகச் செயல்படத் தயாராக உள்ளது” என தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி ஆனந்த நாகேஸ்வரன் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/