share-market highlights | இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் செவ்வாய்க்கிழமை (நவ.7) வர்த்தக அமர்வை தட்டையாக நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 5.05 புள்ளிகள் அல்லது 0.03% சரிந்து 19,406.70 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 16.29 புள்ளிகள் அல்லது 0.03% குறைந்து 64,942.40 ஆகவும் காணப்பட்டது.
நிஃப்டி நெக்ஸ்ட் 50 மற்றும் ஸ்மால்கேப் பங்குகளின் முன்னேற்றத்துடன் பரந்த குறியீடுகள் பச்சை நிறத்தில் முடிவடைந்தன. வங்கி நிஃப்டி குறியீடு 118.50 புள்ளிகள் அல்லது 0.27% சேர்த்து 43,737.90 ஆக இருந்தது.
பார்மா, ஹெல்த்கேர், ஆயில் & கேஸ் மற்றும் பொதுத்துறை வங்கி பங்குகள் மற்ற துறை குறியீடுகளில் ஏற்றம் கண்டன.
அதே சமயம் ரியாலிட்டி, மீடியா, நுகர்வோர் பொருள்கள் மற்றும் ஆட்டோ பங்குகள் திருத்தங்களை எதிர்கொண்டன.
சன் பார்மா, பிபிசிஎல், என்டிபிசி, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவை என்எஸ்இ நிஃப்டி 50-ல் அதிக லாபம் ஈட்டின.
பின்தங்கிய நிலையில் ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஃபைனான்ஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டிவிஸ் லேப் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை காணப்பட்டன.
முக்கிய மாநிலத் தேர்தல்களின் தொடக்கம் மற்றும் மேலும் எதிர்மறையான உலகளாவிய குறிப்புகள் காரணமாக எச்சரிக்கை நிலவுவதால், சந்தை உயர் மட்டங்களில் சில எதிர்ப்பைக் கண்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“