indian overseas bank cheque deposit : நம் அன்றாட வாழ்வில் வங்கிகளின் பங்கு மிகவும் அவசியம். சம்பளம் வாங்குபவர்கள், அன்றாட கூலிகள், கடை நடத்தும் வியாபாரிகள் என அனைவரின் வாழ்வும் பணம் இல்லாமல் நகர்வதில்லை.
படிக்க தெரிதோ தெரியவில்லையோ ஆனால் ஏதாவது ஒரு காரணத்திற்காக நாம் அனைவரும் வங்கி செல்லாமல் இருந்ததில்லை. இப்படி நம் வாழ்வில் பெரும் பங்காற்றும் வங்கியின் சேவைகள் குறித்து பொதுமக்கள் பலருக்கும் தெரிவதில்லை. பல வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ள சிறப்பான சேவைகள் எதுவும் பாதி பேருக்கு தெரிவதில்லை.
அப்படி தெரிந்துக் கொண்டாலும் அதை பலர் மற்றவர்களுக்கு பகிர்வது இல்லை. ஆனால் இந்த செய்தியை படிப்பவர்கள் அப்படி செய்து வீடாதீர்கள். முடிந்தவரை மற்றவர்களுக்கு பகிருங்கள்.
இந்நாள் வரை மிகப் பெரிய பொதுத்துறௌ வங்கியான இந்தியன் ஒவர்சீஸ் வங்கியில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படாமலே இருந்தது. ஆனால் வாடிக்கையாளர்களின் தொடர் வேண்டுக்கோளுக்கு இணங்க மற்ற தனியார் வங்கிகள் போன்று இந்த வங்கியிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
காசோலை என அழைக்கப்படும் செக் டெபாசிட் செய்ய, பாஸ் செய்ய இதுவரை இந்தியன் ஒவர்சீஸ் வாடிக்கையாளர்கள் வங்கியில் கால்நடக்க லைனில் நிற்க வேண்டும். செக் பாஸ் ஆகியதா என்ற தகவலை தெரிந்துக் கொள்ள மீண்டும் வங்கிக்கு வர வேண்டும். வார விடுமுறை நாள் என்றால் சுத்தம். விடுமுறை முடிந்த பின்பே வங்கிக்கு சென்று செக்கை டெபாசிட் செய்ய வேண்டும். இப்படி பல இன்னல்களை சந்தித்து வந்த வாடிக்கையாளர்களுக்கு இதோ குட் நியூஸ்.
இந்தியன் ஒவர்சீஸ் வங்கி ஏடிஎம்-மிலும் செக் டெபாசிட் செய்யும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களிலும் செக் டெபாசிட் செய்யும் வசதி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லை செக் டெபாசிட் செய்த உடனே எப்போது பாஸ் ஆகும் என அனைத்து விவரங்களும் உங்களது தொலைபேசி எண்ணுக்கு மெசேஜாக வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ ஏடிஎம்-ல் எத்தனை முறை வேண்டுமானலும் பணம் எடுத்துக் கொள்ளுங்கள்! அபராதம் இனி இல்லவே இல்லை.
அவ்வளவு தான் இனி கவலைய விடுங்க.. செக் டெபாசிட் செய்வதை எளிமையாக்குங்கள்.