வங்கிக்கணக்கு வைத்துள்ள நாம் அனைவரும், அவசர தேவைகளுக்கு, வங்கியின் ஏடிஎம்களையே சார்ந்து உள்ளோம்.
ஒரு வாடிக்கையாளர், தான் கணக்கு வைத்துள்ள வங்கியில் இருந்து மாதத்துக்கு 5 முறையும், பிற வங்கி ஏடிஎம்களில் 3 முறையும் பணம் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் பணம் எடுக்கும் போது வங்கிகள் சேவைக்கட்டணம் வசூலிக்கும். இந்த சேவைக்கட்டணத்தை, தேசிய பண பரிவர்த்தனை கழகம் நிர்ணயிக்கிறது.
இந்த நிலையில், தற்போது உள்ள கட்டணத்தை மேலும் ₹1.5 முதல் ₹2 உயர்த்த வேண்டும் என ஏடிஎம் நிறுவனங்கள் கோரியுள்ளன. இதுதொடர்பாக வங்கிகள், ஏடிஎம் நிறுவியுள்ள மற்றும் நிர்வகிக்கும் நிறுவனங்களுடன் ஆலோசனைகள் நடத்தி வருகிறது.
மேலும் இந்த கட்டணத்தை 17 ரூபாயாக அதிகரிக்கலாம் என தேசிய பண பரிவர்த்தனை கழகம் பரிந்துரை செய்துள்ளபோதும் ஏற்கெனவே நிதிப்பற்றாக்குறையால் தடுமாறி வரும் வங்கிகள் இதை விரும்பவில்லை.
இந்தியன் ஒவர்சீஸ் வங்கியில் மட்டும் ஒரு சிறப்பான சலுகை உள்ளது. ஆம், அந்த வங்கியின் ஏடிஎம் கார்டை எத்தனை முறை பயன்படுத்தினாலும் வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படாது. அதேபோல, வருடாந்திர சேவைக்கட்டணமாக ரூ. 150 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
நாள் ஒன்றுக்கு ரூ. 50000 வரை பணம் பெற்றுக்கொள்ளும் வசதியை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.