இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எஃப்.டி வட்டி விகிதம் 50பிபிஎஸ் உயர்வு; புதிய வீதம் செக் பண்ணுங்க!
1937 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி நிறுவப்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியானது (IOB), ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்சட் டெப்பாசிட்டுகள் மீதான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 444 நாள்களில் முதிர்ச்சியடையும் டெர்ம் டெபாசிட்டுகளுக்கு அதிகபட்சமாக 7.30% வருமானத்தை வழங்குகிறது.
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00
IOB FD Rates | பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வட்டி விகிதம் 50 பிபிஎஸ் வரை உயர்த்தப்பட்டுள்ளது. புதிய வட்டி விகிதம் குறித்து பார்க்கலாம்.
Advertisment
1937 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி நிறுவப்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியானது (IOB), ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்சட் டெப்பாசிட்டுகள் மீதான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட காலப்பகுதியில் எஃப்டி விகிதங்களை 50 bps உயர்த்தியுள்ளது. ஐஓபி இப்போது 444 நாள்களில் முதிர்ச்சியடையும் டெர்ம் டெபாசிட்டுகளுக்கு அதிகபட்சமாக 7.30% வருமானத்தை வழங்குகிறது.
புதிய நிலையான வைப்பு வட்டி விகிதங்கள் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisement
ஐ.ஓ.பி எஃப்டி விகிதங்கள்
7 முதல் 14 நாள்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு வங்கி 4.00% வட்டியைத் தொடர்ந்து வழங்கும்.
அதே நேரத்தில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, 15 முதல் 60 நாட்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 4.50% வட்டியைத் தொடர்ந்து வழங்கும்.
ஐஓபி 61 மற்றும் 90 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 4.25% வட்டியை வழங்கும், அதே நேரத்தில் வங்கி 91 முதல் 120 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது.
180 நாட்கள் முதல் 1 வருடத்தில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 5.75% ஆக இருக்கும். அதே சமயம் 121 முதல் 179 நாட்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 4.25% வட்டி விகிதம் தொடரும்.
1 வருடம் முதல் 2 ஆண்டுகள் வரை (444 நாட்கள் தவிர) முதிர்ச்சியடையும் உள்நாட்டு கால டெபாசிட்டுகளுக்கு 6.90% வட்டி விகிதமும், 444 நாட்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 7.30% அதிக வட்டி விகிதமும் தொடரும்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 2 முதல் 3 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகள் 6.80% வட்டி விகிதத்தை தொடர்ந்து வழங்குகிறது. அதே வேளையில் 3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் முதிர்ச்சியடைபவைகளுக்கு 6.50% வட்டியுடன் கிடைக்கும்.
மேலும், வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 6.50% ஆக இருக்கும்.
வைப்பு காலம்
ரூ.2 கோடி குறைவான வைப்புத்தொகைக்கான திருத்தப்பட்ட விகிதங்கள் w.e.f. 15.04.2024 (% இல்) அமலுக்கு வந்துள்ளன.
ஃபிக்ஸட் டெபாசிட் காலம்
திருத்தப்பட்ட வட்டி விகிதம் (%)
7 முதல் 14 நாட்கள்
4
15 முதல் 29 நாட்கள்
4.5
30 முதல் 45 நாட்கள்
4.5
46 முதல் 60 நாட்கள்
4.5
61 முதல் 90 நாட்கள்
4.25
91 முதல் 120 நாட்கள்
4.25
121 முதல் 179 நாட்கள்
4.25
180 முதல் 269 நாட்கள்
4.25
270 நாட்கள் முதல் ஒரு ஆண்டுக்கு குறைவு
5.75
1 ஆண்டு முதல் 2 ஆண்டுக்கு குறைவு
(444 நாட்கள் தவிர)
6.9
444 நாட்கள்
7.3
2 ஆண்டு முதல் 3 ஆண்டுக்கு குறைவு
6.8
3 ஆண்டுகளுக்கு அதிகம்
6.5
மூத்த குடிமக்களுக்கு (60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்), கூடுதல் வட்டி விகிதம் 0.50% மற்றும் உயர் மூத்த குடிமக்களுக்கு (80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்), கூடுதல் வட்டி விகிதம் 0.75% ஆக தொடர்கிறது.
ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு, 08.07.2019 அன்று நடைபெற்ற ALCO கூட்டத்தின் எண்-04/2019-20 இல் எடுக்கப்பட்ட முடிவின் மூலம் பொருந்தக்கூடிய வட்டி விகிதம் தொடர்ந்து நிர்வகிக்கப்படும்" என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“