/tamil-ie/media/media_files/uploads/2019/01/merina-2-7.jpg)
state bank of india online sbi
Indian Overseas Bank Interest rates : இந்தியன் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.25% சதவிகிதம் குறைத்த நிலையில், இந்திய ஓவர்சீஸ் வங்கி வட்டியை குறைத்துள்ளது. அதாவது ஓராண்டு மற்றும் அதற்கு கூடுதலான காலத்திற்கு ஐந்து அடிப்படை புள்ளிகள் என்ற அளவில், கடன்களுக்கான வட்டி விகிதத்தை இந்த வங்கி குறைத்துள்ளது.
இந்நிலையில், 15 நாட்களுக்கான வட்டி விகிதம் 8.15% சதவிகிதமாக குறைத்துள்ளதோடு, ஒரு மாதத்திற்கான வட்டி விகிதம் 8.30% சதவிகிதமாக அறிவித்துள்ளது. மேலும் 3 மாதங்களுக்கு 8.45% சதவிகிதமாகவும், 6 மாதங்களுக்கு 8.50% சதவிகிதமாகவும் குறைத்துள்ளது.
அத்துடன் வருடத்திற்கு 8.65% சதவிகிதமாகவும், அதுவே இரண்டு ஆண்டுகளுக்கு 8.75% சதவிகிதமாகவும், 3 ஆண்டுகளுக்கு 8.85% சதவிகிதமாகவும் கடங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்திய ஓவர்சீஸ் வங்கியின் இந்த வட்டி குறைப்பினால் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என்றும் குறிப்பாக வீட்டுக் கடன், வாகனக் கடன் வட்டி குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியன் ஒவர்சிஸ் வங்கியின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பெர்சனல் லோன் வாங்கி இருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் வட்டி விகிதம் குறைய அதிகளவில் வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.