/tamil-ie/media/media_files/uploads/2019/06/z1015.jpg)
Indian overseas bank Lending Rates mclr - வாடிக்கையாளர்களுக்கு ஐ.ஓ.பி வங்கியின் அதிரடி அறிவிப்பு!
வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி(IOB) அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் ஐஒபி வங்கியின் எம்.சி.எல்.ஆர். எனப்படும் கடன் வட்டி விகிதம் 0.10 சதவீதம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.
வங்கிகளின் வட்டிச் செலவின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் கடன் வட்டி விகிதமே எம்.சி.எல்.ஆர். என்பது . இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அனைத்து முதிர்வுகளிலும் இந்த வட்டி விகிதத்தை 0.10 சதவீதம் வரை குறைத்து இருக்கிறது.
இந்நிலையில், ஓராண்டு முதிர்வு கால வட்டி விகிதம் 0.10 சதவீதம் குறைந்து 8.70 சதவீதமாக உள்ளது.
2–3 ஆண்டுகளுக்கான எம்.சி.எல்.ஆர். முறையே 8.80 சதவீதம் மற்றும் 8.90 சதவீதமாக குறைந்து இருக்கிறது. 6 மாதங்களுக்கான இந்த வட்டி விகிதம் முதலில் 8.60 சதவீதமாக இருந்தது. இது இப்போது 8.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க - இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மிகப் பெரிய அறிவிப்பு.. என்னன்னு பாருங்க!
மூன்று மாதங்களுக்கான வட்டி (8.50 சதவீதத்தில் இருந்து) 8.45 சதவீதமாக குறைந்துள்ளது. இது தவிர, சுப கிரஹா திட்டம், என்ஆர்ஐ வீட்டு கடன், வீடு புதுப்பித்தல் மற்றும் அழகுபடுத்தும் திட்டங்களின் கீழ் வீட்டு கடன்கள் மற்றும் வாகன கடன்களுக்கான செயல்பாட்டு கட்டணங்களை விழாக்கால சலுகையாக வங்கி அறிவித்துள்ளது.
இந்நிலையில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் விளங்கி வருகின்றன. மேலும், இந்தியாவின் உள்ள 12 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.