indian overseas bank loan interest rate : இந்தியன் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கு, வட்டி விகிதத்தை 0.25% சதவிகிதம் குறைத்த நிலையில், சில வங்கிகள் இதன் அடிப்படையில் கடனுக்கான வட்டியை குறைத்து வருகின்றன. இதன் அடிப்படையில் இந்திய ஓவர்சீஸ் வங்கி வட்டியை குறைத்துள்ளது. இதன் விவரத்தை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
ஓராண்டு மற்றும் அதற்கு கூடுதலான காலத்திற்கு ஐந்து அடிப்படை புள்ளிகள் என்ற அளவில், கடன்களுக்கான வட்டி விகிதத்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி குறைத்துள்ளது.
15 நாட்களுக்கான வட்டி விகிதம் 8.15% சதவிகிதமாகவும், ஒரு மாதத்திற்கான வட்டி விகிதம் 8.30% சதவிகிதமாகவும், 3 மாதங்களுக்கு 8.45% சதவிகிதமாகவும், 6 மாதங்களுக்கு 8.50% சதவிகிதமாகவும், வருடத்திற்கு 8.65% சதவிகிதமாகவும், அதுவே இரண்டு ஆண்டுகளுக்கு 8.75% சதவிகிதமாகவும், 3 ஆண்டுகளுக்கு 8.85% சதவிகிதமாகவும் கடங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த வட்டி குறைப்பினால் கடங்களுக்கான வட்டி விகிதம் குறையும் என்றும் குறிப்பாக வீட்டுக் கடன், வாகனக் கடன் வட்டி குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மிகுந்த பயன் அடைவார்கள் என்றும் தெரிகிறது.
இதை விட வேறென்ன வேண்டும் பாஸ்! பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.50 % வட்டி
பொதுத்துறை சேவயில் வாடிக்கையாளர்கள் தேவையில் அதிகம் கவனம் செலுத்தும் இந்தியன் ஒவர்சிஸ் வங்கியின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதும். மேலும் பெர்சனல் லோன் வாங்கி இருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் வட்டி விகிதம் குறைய அதிகளவில் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.