indian overseas bank : வங்கிகளுக்கு, இந்தியன் ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கு, 0.25% சதவிகித வட்டி குறைத்த நிலையில், சில வங்கிகளும் கடனுக்கான வட்டியை குறைத்து வருகின்றன.
இதன் அடிப்படையில் இந்திய ஓவர்சீஸ் வங்கி வட்டியை குறைத்துள்ளது. ஆதாவது ஓராண்டு மற்றும் அதற்கு கூடுதலான காலத்திற்கு ஐந்து அடிப்படை புள்ளிகள் என்ற அளவில், கடன்களுக்கான வட்டி விகிதம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியால் குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 15 நாட்களுக்கான வட்டி விகிதம் 8.15% சதவிகிதமாகவும், ஒரு மாதத்திற்கான வட்டி விகிதம் 8.30% சதவிகிதமாகவும், 3 மாதங்களுக்கு 8.45% சதவிகிதமாகவும், 6 மாதங்களுக்கு 8.50% சதவிகிதமாகவும், வருடத்திற்கு 8.65% சதவிகிதமாகவும், அதுவே இரண்டு ஆண்டுகளுக்கு 8.75% சதவிகிதமாகவும், 3 ஆண்டுகளுக்கு 8.85% சதவிகிதமாகவும் கடங்களுக்கான வட்டி விகிதம்
குறைக்கப்பட்டுள்ளது.
இந்த வட்டி குறைப்பினால் வீட்டுக் கடன், வாகனக் கடன் வட்டி குறையும் என்றும்
எதிர்பார்க்கப்படுகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தியாக
அமைந்துள்ளது.
எஸ்பிஐ வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்! வாடிக்கையாளர்கள் மிஸ் பண்ணிடாதீங்க.
வாடிக்கையாளர்கள் நலனில் அதிகம் கவனம் செலுத்தும் இந்தியன் ஒவர்சிஸ் வங்கியின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதும். இந்நிலையில், பெர்சனல் லோன் வாங்கி இருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் வட்டி விகிதம் குறைய அதிகளவில் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.