Indian Overseas Bank Tamil News: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) தனது சில்லறை கடன்களை, அதாவது க்ளீன் கடன், நுகர்வு கடன்கள்-சஹாயிகா, கல்வி கடன்கள்-வித்யஜோதி, வித்யா ஜோதி, புஷ்பாகா - வாகன கடன்கள் , நகைகள் மற்றும் ஐஓபி பேஷனுக்கு எதிரான வணிக ரொக்க கடன் ஆகியவற்றை கடந்த வியாழக்கிழமையன்று அறிமுகப்படுத்தியது.
ஐஓபியின் சில்லறை கடன்களும், ஆன்லைன் வங்கி மற்றும் மொபைல் வங்கி போன்ற பயன்பாடுகளில் கிடைக்கின்றன என்று அதன் வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அல்லாதவர்கள் வங்கியின் வலைத்தளம் வழியாக மட்டுமே இந்த கடன்களுக்கு விண்ணப்பிக்க முடியும். அதேசமயம் ஐஓபி வாடிக்கையாளர்கள் இந்த சேவைகளில் ஏதேனும் ஒன்றன் வழியாக விண்ணப்பிக்க முடியும்.
வாடிக்கையாளர்கள் தங்களின் வீட்டுக் கடன்களுக்கு PMAY திட்டங்களின் கீழ் விண்ணப்பிக்க முடியும், அத்துடன் தங்கள் வீட்டுக் கடன்களை மற்ற வங்கிகளிலிருந்து IOB க்கு மாற்ற முடியும் என்று வங்கி தெரிவித்துள்ளது.
விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்தும், கடனின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் ஒப்புதலைத் தொடர்ந்தும், குறிப்பு எண்ணைக் கொண்ட ஒரு கொள்கை ரீதியான ஒப்புதல் கடிதம் உருவாக்கப்பட்டு விண்ணப்பதாரருக்கு எஸ்எம்எஸ் / மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும் என்று ஐஓபி தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் பின்னர் கடன் பெற தேவையான ஆவணங்கள் மற்றும் கொள்கை ரீதியான ஒப்புதல் கடிதத்துடன் அருகிலுள்ள கிளைக்குச் செல்ல வேண்டும். பின்னணி ஆராய்ச்சியுடன் கடன் வாங்கியவரின் ஆவணங்களை கிளை சரிபார்த்த பிறகு கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)