indian overseas net banking registration : பொதுத்துறை வங்கிகளில் எஸ்பிஐ க்கு பிறகு மக்கள் அதிகம் நாடி செல்வது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை தான். எளிமையான விதிமுறைகள் குறைவான மினிமம் பேலன்ஸ், அபராத கட்டணங்கள் அதிகம் கிடையாது என ஐஓபி வங்கியில் இருக்கும் சில சிறப்பு அம்சங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்திருப்பது இதற்கு மிகப் பெரிய காரணம் என்றே கூறலாம்.
Advertisment
அந்த வகையில் இதுவரை இந்த தகவலை தெரிந்துக் கொள்ளாதவர்கள் இந்த செய்தி தொகுப்பு மூலம் தெரிந்துக் கொள்ளலாம். அதுமட்டுமில்லை தெரியாதவர்களுக்கு பகிரலாம். ஐஓபி வங்கியை பொருத்தவரையில் நீங்கள் அக்கவுண்ட் ஓபன் செய்யும் போதே உங்களால் நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்த முடியாது. அதாவது, கஸ்டர் ஐடி இருந்தால் போதும் நீங்களாகவே நெட் பேக்கிங்கை ஓபன் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற முறையே இங்கு இல்லை
நீங்கள் ஐஓபி வாடிக்கையாளரா அப்படியென்றால் ஐஓபி வங்கியின் இணையதள வங்கி சேவையின் பயன்களைப் பயன்படுத்த நீங்கள் முதலில் ஐஓபி இணையதள வங்கி சேவையில் பதிவு செய்ய வேண்டும்.
indian overseas net banking registration : பதிவு செய்வது எப்படி?
Advertisment
Advertisements
ஐஓபி இணையதள வங்கி சேவைக்கு பதிவு செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்.
www.iobnet.co.in. என்ற இணையதள முகவரியில் உழ்நுழையவும்.தனிநபர் அல்லது proprietary firm ஆக இருந்தால் தனிநபர் பதிவு (Register Individual) என்பதை சொடுக்கவும். அல்லது பெருநிறுவன பதிவு (Register Corporate) என்பதை சொடுக்கவும்.
ஒருமுறை நீங்கள் பதிவு செய்த பிறகு, உங்கள் விண்ணப்ப படிவத்தை உங்கள் சேமிப்பு கணக்கு உள்ள வங்கி கிளையில் சமர்பிக்கவும்.இணையதள வங்கி சேவையை பெற செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு மின்னஞ்சல் முகவரி தேவை.
அனைத்து நிதி பரிமாற்ற பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ள PIN எண்ணை எழுதி வைத்துக் கொள்ளவும்.விண்ணப்பத்தை பெற்றுக் கொண்ட பிறகு உங்கள் இணையதள வங்கி சேவை கணக்கு வங்கியால் செயல்படுத்தப்படும்.
ஐஓபி வங்கி இணையதள சேவையில் உழ்நுழையும் செயல்முறை.உங்கள் கடவுச்சொல்லை பயன்படுத்தி உழ்நுழையவும். கடவுச்சொற்கள் case sensitive என்பதை கவனத்தில் கொள்ளவும்.
உங்களுடைய உழ்நுழையும் கடவுச்சொல் மற்றும் பரிவர்த்தனை PIN ஆகியவை வெவ்வேறானவை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். கடவுச்சொல் உழ்நுழையவும், PIN நிதி பரிமாற்றத்துக்கும் பயன்படக்கூடியது.
உங்கள் கடவுச்சொல்லை உள்ளீடு செய்யும் போது மிகவும் கவனமாக இருக்கவும். தொடர்ச்சியாக கடவுச்சொல்லை தவறாக உள்ளீடு செய்தால் உங்கள் இணையதள வங்கி சேவை முடக்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news