ரயில்வே அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள 728 ரயில் நிலையங்களில் 700க்கும் மேற்பட்ட ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு (OSOP) விற்பனை நிலையங்களைக் அமைத்துள்ளது.
இந்த நடவடிக்கையானது ‘உள்ளூர்க்கான குரல்’ பார்வையை ஊக்குவிப்பது மற்றும் உள்ளூர் அல்லது உள்நாட்டு தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கான சந்தையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவதுடன், சமூகத்தின் விளிம்புநிலை பிரிவினருக்கு வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். OSOP திட்டத்தின் முன்னோடித் திட்டம் மார்ச் 25, 2022 அன்று தொடங்கப்பட்டது.
மே 01, 2023 நிலவரப்படி, 21 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் (UTs) 728 நிலையங்களில் மொத்தம் 785 விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. OSOP ஸ்டால்கள் தேசிய வடிவமைப்பு நிறுவனத்தால் சீரானதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கடைகளில் கிடைக்கும் பொருள்கள்
- உணவுப் பொருட்கள் (பருவகால அல்லது பதப்படுத்தப்பட்ட அல்லது அரை பதப்படுத்தப்பட்ட உணவுகள்)
- கைவினைப்பொருட்கள்
- கலைப்பொருட்கள்
- ஜவுளி
- கைத்தறி
- பாரம்பரிய ஆடைகள்
- உள்ளூர் விவசாய பொருட்கள்
- உள்ளூர் பொம்மைகள்
- தோல் பொருட்கள்
- உள்ளூர் கற்கள் மற்றும் நகைகள்
தென்னிந்தியாவில் முந்திரி பொருட்கள், மசாலா பொருட்கள், சின்னாளபட்டி கைத்தறி சேலைகள் பயணிகளின் கவனத்தை ஈர்க்கின்றன.
நாட்டின் மேற்குப் பகுதியில், எம்பிராய்டரி & ஜரி சர்தோசி, தேங்காய் அல்வா, உள்நாட்டில் விளையும் பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பந்தனி ஆகியவை பிரபலமானவை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“