Advertisment

ரயில் பயணத்தில் உலகத்தர அனுபவம் - இந்தியன் ரயில்வே அசத்தல்

பயணிகள் ரயில் சேவைகளை இயக்குவதில் தனியார் துறையினரின் பங்களிப்பு குறித்த திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
indian railways, railways, piyush goyal, private trains, niti aayog

indian railways, railways, piyush goyal, private trains, niti aayog

உலகத்தரம் வாய்ந்த தனியார் ரயில்கள் இந்திய ரயில்வேயில் வரப்போகிறது. மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையிலான ரயில்வே அமைச்சரகம் மற்றும் National Institution for Transforming India (NITI) Aayog ஆகியவை, 100 இந்திய ரயில்வே தடங்களில் பயணிகள் ரயில் சேவைகளை இயக்குவதில் தனியார் துறையினரின் பங்களிப்பு குறித்த திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். தனியாரால் இயக்கப்பட உள்ள ரயில்களில் வரவுள்ள மிகவும் சுவாரஸ்யமான முக்கிய அம்சங்களைப் பற்றி கீழே பார்கலாம்.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

நவீன வடிவமைப்பு: இந்த ரயில்கள் ஸ்டீல் மற்றும் அலுமினிய வெளிப்புறங்கள், நவீன வடிவமைப்புடன் கூடிய பெட்டிகள், பிரேக் அமைப்பு ஆகியவற்றால் வடிவமைக்கப்பட போகின்றன.

பயணிகள் விரும்பும் அம்சங்கள்: சிறந்த சவாரி குறியீடு (superior ride index), சிறந்த உடபுற வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட கிழிப்பறை வசதி ஆகியவற்றால் ரயில் பயணிகளுக்கு சிறந்த சொளகரியம் கிடைக்கும்.

சிறந்த பாதுகப்பு அம்சங்கள் : இந்த ரயில்களில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் anticlimbing அம்சத்துடன் கூடிய நவீன couplers, தீ பிடிக்காத உட்புறங்கள், பாதுகாப்பான inter rail car movement க்காக பரந்த gangway வடிவமைப்பு ஆகியவை இடம்பெறும்.

ரயில் உள்ளே உள்ள அம்சங்கள்: அடுத்து வரவிருக்கும் ரயில் நிலையங்கள் குறித்த தகவல்கள், சென்று சேரவேண்டிய ரயில் நிலையத்தை எவ்வுளவு நேரத்தில் சென்றடையும் என்ற தகவல், பாதுகாப்பு அறிவிப்புகள் முதலியவற்றை செய்வதற்காக ரயில் பெட்டியில் GPS வசதியோடு இயங்கக்கூடிய பயணிகள் அறிவிப்பு அமைப்பு இடம்பெற்றிருக்கும்.

குறைந்த பராமரிப்பு: இந்த ரயில்களுக்கு குறைந்த பராமரிப்பே தேவைப்படும், அதிலும் குறிப்பாக pit பராமரிப்புகள்.

IGBT propulsion system: பயணிகளுக்கான இடத்தை விடுவிக்க இந்த ரயில்களில் under-slung/roof-mounted IGBT propulsion system இருக்கும்.

மாற்று திறனாளிகளுக்கான வசதிகள்: மடக்கும் வகையிலான படிகள் மற்றும் மாற்று திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையிலான வசதிகள் இதில் இடம்பெற்றிருக்கும்.

குளிரூட்டும் வசதி: தானியங்கி ஈரப்பதம் மற்றும் வெப்ப நிலை கட்டுப்படுத்தும் வசதியோடு கூடிய திறமையான குளிரூட்டும் வசதி மற்றும் fresh air ventilation ஆகியவை இந்த ரயில்களில் இருக்கும்.

ரயில் உட்புறம்: இந்த ரயில்களில் vandal-proof interiors இருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Indian Railways
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment