இந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை லாபத்தில் இயங்கின. மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 61,300க்கு மேலேயும், தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி 50க்கு மேல் 18,000க்கு மேல் நிலைபெற்றன.
மும்பை பங்குச் சந்தையை பொறுத்தமட்டில், டெக் மஹிந்திரா (5.58%), நெஸ்லே இந்தியா (1.64%), டாடா ஸ்டீல் (1.50%), என்டிபிசி (1.06%) மற்றும் டிசிஎஸ் (1% உயர்வு) ஆகியவை அதிக லாபம் பெற்றன.
மறுபுறம், மஹிந்திரா & மஹிந்திரா (0.92% சரிவு), ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (HUL) (0.83% சரிவு), ஆக்சிஸ் வங்கி (0.78% சரிவு), பஜாஜ் ஃபைனான்ஸ் (0.77% சரிவு) மற்றும் டாடா மோட்டார்ஸ் (0.55% சரிவு) ஆகியவை சரிவை சந்தித்தன.
பேங்க் நிஃப்டி சரிவு
தொடர்ந்து, பேங்க் நிஃப்டி 0.24% சரிந்தது, நிஃப்டி ஆட்டோ 0.22% சரிந்தது, நிஃப்டி எஃப்எம்சிஜி 0.09% சரிந்தது, நிஃப்டி ஐடி 1.62% உயர்ந்தது, நிஃப்டி ரியாலிட்டி 1.33% மற்றும் நிஃப்டி மெட்டல் 1.23% முன்னேறியது.
இந்திய ரூபாயின் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.11% உயர்ந்து 82.71 ஆக இருந்தது.
தங்கம், வெள்ளி
ஏப்ரல் டெலிவரிக்கான மல்டி-கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் தங்கம் 34 புள்ளிகள் அல்லது 0.06% குறைந்து 56,092.00 ஆகவும், மார்ச் டெலிவரிக்கான வெள்ளி 23 புள்ளிகள் அல்லது 0.04% குறைந்து 65,398.00 ஆகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.
கச்சா எண்ணெய்
மார்ச் டெலிவரிக்கான WTI கச்சா 0.03% குறைந்து $78.48 ஆக இருந்தது. அதே நேரத்தில் மார்ச் டெலிவரிக்கான ப்ரெண்ட் கச்சா 0.12% குறைந்து $85.28 இல் பிற்பகல் 3:22 மணிக்கு (IST) வர்த்தகம் செய்யப்பட்டது.
சென்செக்ஸ், நிஃப்டி
இன்றைய பங்கு வர்த்தகத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் 44.42 புள்ளிகள் அல்லது 0.07% உயர்ந்து 61,319.51 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 50 20.00 புள்ளிகள் அல்லது 0.11% அதிகரித்து 18,035.85 ஆகவும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/