share-market | இந்தியப் பங்குச் சந்தைகள் புதன்கிழமை (ஜன.17,2024) அமர்வை கடும் சரிவில் நிறைவு செய்தன. சென்செக்ஸ் 1600 புள்ளிகளும், நிஃப்டி 450 புள்ளிகளும் வீழ்ச்சி கண்டன.
தற்போது மும்பை பங்குச் சந்தை 71,513.06 சென்செக்ஸ் புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி-50 21,575 ஆகவும் காணப்பட்டன.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 2.21 சதவீதமும், நிஃப்டி 2.08 சதவீதமும் சரிந்தன. ஹெச்டிஎஃப்சி காலாண்டு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் இன்று அந்நிறுவன பங்குகள் 7 சதவீதம் வரை சரிந்து காணப்பட்டன.
வங்கிப் பங்குகளை பொறுத்தமட்டில் ஐசிஐசிஐ வங்கி, கோடக் வங்கி, எஸ்பிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி மற்றும் இண்டஸ்இந்த் வங்கி பங்குகள் 2 சதவீதம் வரை சரிந்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“