கொலம்பியா பல்கலை.யில் ரூ.89 லட்சம் ஸ்காலர்ஷிப் கிடைத்தும் சோகம்: இந்திய மாணவருக்கு விசா தர மறுத்த அமெரிக்கா

கொலம்பியா பல்கலைக் கழகத்தில் இதழியல் பட்டப்படிப்புக்காக $100,000 (சுமார் ரூ.89 லட்சம்) உதவித்தொகை பெற்ற இந்திய மாணவர் கௌஷிக் ராஜ்-க்கு, அமெரிக்கா மாணவர் விசாவை (F1) இறுதிச் சுற்றில் நிராகரித்துள்ளது.

கொலம்பியா பல்கலைக் கழகத்தில் இதழியல் பட்டப்படிப்புக்காக $100,000 (சுமார் ரூ.89 லட்சம்) உதவித்தொகை பெற்ற இந்திய மாணவர் கௌஷிக் ராஜ்-க்கு, அமெரிக்கா மாணவர் விசாவை (F1) இறுதிச் சுற்றில் நிராகரித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Indian student

ரூ.89 லட்சம் உதவித் தொகை பெற்ற இந்திய மாணவருக்கு அமெரிக்கா விசா மறுப்பு

கொலம்பியா பல்கலைக் கழகத்தில் இதழியல் துறையில் உயர்கல்வி படிக்க, $100,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.89 லட்சம்) உதவித்தொகையை வென்ற இந்திய மாணவர் கௌஷிக் ராஜ்-க்கு, அமெரிக்கா தனது இறுதி கட்ட விண்ணப்ப செயல்பாட்டில் மாணவர் விசாவை (student visa) மறுத்து உள்ளது.

Advertisment

கொலம்பியா பல்கலைக் கழகத்தில் கௌஷிக் ராஜ்-க்கு சேர்க்கை உறுதியான நிலையிலும், அவரது விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு அவரது சமூக ஊடகச் செயல்பாடுகள், குறிப்பாக அவரது தொழில்முறை இதழியல் அறிக்கைகளே காரணமாக இருக்கலாம் என்று அவர் நம்புவதாக தி வாஷிங்டன் போஸ்ட் அறிக்கை தெரிவிக்கிறது.

27 வயதான ராஜ், அமெரிக்க மாணவர் விசாவுக்குத் தேவையான அனைத்து ஆரம்ப கட்ட நடவடிக்கைகளையும் முடித்திருந்தார். கடைசி கட்டமாக, தனது சமூக ஊடக விவரங்களைப் பொதுவெளியில் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. இது, அதிக ஆய்வுக்கு உட்படுத்தும் நோக்குடன் டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கை மாற்றத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டாயத் தேவை ஆகும்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

"நான் ஆன்லைனில் மிக சுறுசுறுப்பாக இருக்கவில்லை. காசா போன்ற உலகளாவிய விவகாரங்களைப் பற்றி நான் ஒருபோதும் தனிப்பட்ட கருத்துகளைப் பதிவிட்டது இல்லை. ஆனால், நான் எனது செய்திகளைப் பகிர்ந்திருக்கிறேன். வெறுப்புக் குற்றங்கள் மற்றும் இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படுவது தொடர்பான கட்டுரைகளை பகிர்ந்துள்ளேன்" என்று ராஜ் தி வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாளிடம் கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

சமூக ஊடக விவரங்களைப் பொதுவெளியில் வைத்து, அவற்றைக் கொண்ட அதிகாரிகளின் முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய திரையிடல் கொள்கை நடைமுறைக்கு வந்த 2 மாதங்களுக்குப் பிறகு, ஆக.21 அன்று, நியூ டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து ராஜுக்கு நிராகரிப்புக் கடிதம் கிடைத்தது.

அந்தக் கடிதத்தில் அவரது ஆன்லைன் செயல்பாடுகள் குறித்து நேரடியாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. மாறாக, அவர் தனது படிப்பு முடிந்த பிறகு இந்தியா திரும்புவார் என்பதைக் காட்ட போதுமான பிணைப்பை அவர் நிரூபிக்கத் தவறிவிட்டார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"இது நிச்சயமாக அவர்கள் எனது சமூக ஊடகங்களை ஆராய்ந்ததால்தான்" என்று ராஜ் கூறினார். "நான் இப்போது இங்கிலாந்திற்கு விண்ணப்பிப்பேன். நான் இன்னமும் இதழியல் படிக்க விரும்புகிறேன். ஆனால், அதைச் செய்ததற்காக உங்களைத் தண்டிக்கும் ஒரு நாட்டில் படிக்க விரும்பவில்லை" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அந்த அறிக்கையின்படி, மற்ற 3 இந்திய மாணவர்களும் இதேபோன்ற விசா மறுப்புகளைப் புகாரளித்துள்ளனர். அவர்களும் ஆரம்ப கட்டங்களை முடித்து, சமூக ஊடக சோதனைக்குப் பின் நிராகரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தங்கள் வாழ்நாள் முழுவதையும் இந்தியாவிலேயே கழித்த போதிலும், இந்தியாவுடன் போதுமான பிணைப்புகளை நிரூபிக்கத் தவறிவிட்டதாகக் கூறப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, வெள்ளை மாளிகையின் துணைப் பத்திரிகைச் செயலாளர் அன்னா கெல்லி கொள்கையை பாதுகாத்து, "எங்க நாட்டில் உள்ள 'விருந்தினர்கள்' என்று அழைக்கப்படுபவர்கள் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலோ (அ) அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையைச் சீர்குலைக்க முயற்சிக்கவோ இல்லை என்பதை டிரம்ப் நிர்வாகம் உறுதி செய்கிறது," என்று கூறினார்.

Business

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: