இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்க புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. மக்களிடம் இருக்கும் சேமிக்கும் பழக்கம் என்பது மிகவும் நற்பண்புகளில் ஒன்று, நாம் சிறுக சிறுக சேமிக்கும் பணம் பிற்காலத்தில் நமக்கு அவசர தேவைக்கு கட்டாயம் உதவும். அதிலும் பொதுத்துறை வங்கிகளில் பெரும்பாலும் தொடரும் சேமிப்புக் கணக்கானது லாபம் ஈட்டும் வகையில் கட்டாயம் இருப்பது உறுதி.
வங்கிகளில்சேமிப்புக் கணக்கு தொடங்க வேண்டும் என்றால் கட்டாயம் நேரம் எடுக்கும். சேலரி அக்கவுண்ட் என்றால் ஈஸியாக தொடங்கிடலாம். ஆனால் சேமிப்பு கணக்கு என்று வரும் போது அதற்கு வங்கி நிர்வாகம் அதிகம் மெனகெடும்.
ஒரிஜனல் ஆதாரங்களை எடுத்துக் கொண்டு சரியான ஆவனங்களை முறையாக வங்கியில் சமர்பித்து சேவிங்ஸ் அக்கவுண்டை தொடங்க வேண்டும். அந்த வகையில் இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. சேமிப்புக் கணக்கை வாடிக்கையாளர்களே தொடங்க உதவும் நவீன தொழில்நுட்பத்தை, இந்தியன் வங்கி அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து இந்தியன் வங்கியின் துணைப் பொது மேலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், எங்கிருந்து வேண்டுமானாலும் சேமிப்புக் கணக்கைத் தொடங்கும் வகையில், ஐபிடிஜி எனும் புதிய தொழில்நுட்பத்தை இந்தியன் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் இந்தியன் வங்கி வாடிக்கையாளர் ஆப் மற்றும் வங்கியின் வலைதளத்தில் ஆதார் எண், பெயர், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரியைப் பதிவிட்டு சேமிப்புக் கணக்கினைத் தொடங்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil