indianbank net banking : கடன். நடுத்தர வர்க்கம் தொடங்கி பெரிய பெரிய முதலீட்டாளர்கள் வரை தொழில் தொடங்கி அவசர தேவை, தனிப்பட்ட காரணம் என எத்தனையோ விஷயங்களுக்கு கடன் வாங்குவார்கள். முடிந்தவர்கள் சரியான நேரத்தில் தவணையை கட்டி விடுவார்கள்.
இயலாதவர்கள் அந்த மாதத்திற்கான தொகையை கட்டதவறிவிடுவார்கள். இந்த வங்கி நிர்வாக வட்டி சேர்த்து ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்கள் தலையில் கட்டும். இப்படியே தவணை, வட்டி நீங்கள் வாங்கிய 2 லட்சம் 5 லட்சம் வரை செல்லவும் வாய்ப்புண்டு.
இப்படி வங்கிகளில் கடன் வாங்கி அதை திரும்ப செலுத்த முடியாமல் சிக்கி தவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு தான் இந்த பகிர்வு. நீங்கள் மிக பெரிய பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் ரூ. 10 லட்சம் வரை கடன் பெற்று அதை திரும்பி செலுத்தாமல் இருக்கிறீர்களா? அப்ப இந்த தகவலை மிஸ் பண்ணாதீங்க. முடிந்த வரை தெரியாவதர்களுக்கு பகிருங்கள்.
இந்தியன் வங்கியில் ரூ.10 லட்சம் வரை கடன் பெற்று, திரும்பி செலுத்தாதவர்கள், ஒரே தவணையில் சமரச தீர்வு காணுவதற்கான முகாம் இந்தியன் வங்கி சார்பில் நடத்தப்படுகிறது. அந்த முகாம் எங்கு நடக்கிறது என்பதை முதலில் நீங்கள் தெரிந்துக் கொள்ளுங்கள்.
indianbank net banking : முத்ரா கடன்!
இந்தியன் வங்கிகளில் மாணவர்களுக்கு கல்வி கடன், விவசாயிகளுக்கு பயிர் கடன், டிராக்டர் வாங்க கடன் வழங்கப்பட்டுள்ளது. முத்ரா கடன் திட்டத்தின் கீழ் குறு, சிறு தொழில் துவங்கவும் கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது.கடனை திருப்பிச் செலுத்த வசதியாக தற்போது, ஒரே தவணையில் பணம் செலுத்தி, சமரச தீர்வு காண, சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இந்த முகாமில், ரூ.10 லட்சம் வரை நிலுவையில் உள்ள கடன்களை திருப்பி செலுத்தி சமரச தீர்வு காணலாம்.குறிப்பாக ரூ.10 லட்சம் வரையிலான விவசாய கடன்கள் (பயிர் கடன்கள், கே.சி.சி., டிராக்டர் கடன்), குறு, சிறு தொழில் துவங்க பெற்ற முத்ரா கடன்கள், வீட்டு கடன்கள், வாகன கடன்கள், நுகர்வோர் கடன் மற்றும் 7.50 லட்சம் வரையிலான கல்வி கடன்களை அதிக பட்ச சலுகையுடன் ஒரே தவணையில் சமரச தீர்வு காண முடியும்.
கடன் சுமையில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு கைக்கொடுக்கும் எஸ்பிஐ!
அந்தந்த பகுதிகளில் உள்ள இந்தியன் வங்கி கிளைகளில் அணுகி, தங்கன் கடன் தொகையை செலுத்தி, சமரசம் செய்து கொள்ளலாம்.ஒரே தவணையாக தொகையை செலுத்தியதும், உடனடியாக ஆட்சேபணை இல்லை என்ற சான்றிதழும் மற்றும் ஆவணங்களும் விடுவிக்கப்படும்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.