Indias forex reserve: செப்டம்பர் 8ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 4.992 பில்லியன் டாலர் குறைந்து 593.904 பில்லியன் டாலராக உள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை (செப்.15) தெரிவித்துள்ளது.
இதுவே, முந்தைய அறிக்கை வாரத்தில், அந்நிய செலாவணி 4.039 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உயர்ந்து 598.897 பில்லியனாக இருந்தது.
இந்நிலையில், 2021 அக்டோபரில் நாட்டின் அந்நியச் செலாவணி 645 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. கடந்த ஆண்டு முதல் உலகளாவிய முன்னேற்றங்களால் ஏற்பட்ட அழுத்தங்களுக்கு மத்தியில் ரூபாயைப் பாதுகாக்க மத்திய வங்கி கையிருப்புகளைப் பயன்படுத்தியதால் கையிருப்பு பாதிக்கப்பட்டது.
இதற்கிடையில், செப்டம்பர் 8 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், ரிசர்வ் வங்கி வெளியிட்ட வாராந்திர புள்ளி விவர இணைப்பின்படி, கையிருப்பின் முக்கிய அங்கமான வெளிநாட்டு நாணயச் சொத்துக்கள் 4.265 பில்லியன் டாலர்கள் குறைந்து 526.426 பில்லியன் டாலர்களாக உள்ளது.
இதேபோல், தங்கம் கையிருப்பு 554 மில்லியன் டாலர் குறைந்து 44.384 பில்லியன் டாலராக உள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதேபோல் சிறப்பு ட்ராயிங் உரிமைகள் (special drawing rights) 134 மில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைந்து 18.06 பில்லியன் டாலராக உள்ளது.
தொடர்ந்து, IMF உடனான நாட்டின் இருப்பு நிலை அறிக்கை வாரத்தில் 39 மில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைந்து 5.034 பில்லியன் டாலராக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“