Advertisment

இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி முதல் காலாண்டில் 6.7 சதவீதமாக சரிவு

முதல் காலாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 15 மாதங்களில் இல்லாத அளவாக 6.7% ஆக குறைந்தது

author-image
WebDesk
New Update
farmer wheat

வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) முந்தைய நிதியாண்டின் 8.2 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாதங்களில் 6.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதற்கு முன்பு 2023 ஜனவரி-மார்ச் காலாண்டில் 6.2 சதவீதமாக இருந்தது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: India’s Q1 GDP growth rate slows down to 15-month low of 6.7%

இருப்பினும், சீனாவின் ஜி.டி.பி வளர்ச்சி முதல் காலாண்டில் 4.7 சதவீதமாக இருப்பதால், இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது.

தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) தரவுகளின்படி, விவசாயத் துறையானது 2023-24 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 3.7 சதவீதத்திலிருந்து 2 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.

இதற்கிடையில், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் உற்பத்தித் துறை 7 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது, இது முந்தைய ஆண்டின் 5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.

கடந்த நிதியாண்டில் 7 சதவீதமாக இருந்த ‘சுரங்கம் மற்றும் குவாரிகளில்’ உற்பத்தி (GVA) முதல் காலாண்டில் 7.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

India Gdp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment