தீபாவளி பண்டிகை தொடங்க இன்னும் 1 வார காலம் மட்டுமே உள்ள நிலையில், இண்டிகோ விமான நிறுவனம் பயணிக்களுக்கு மிகப்பெரிய ஆஃபரை அறிவித்துள்ளது.
இண்டிகோ விமானம் :
சர்வதேச அளவில் விமானத்தில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்த முன்னணி விமான சேவை நிறுவனங்களும் நீ.. நான் என போட்டிப்போட்டுக் கொண்டு இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று.
இதற்காக விமான நிறுவனங்கள் பண்டிகைக் காலங்களை அதிகமாக பயன்படுத்திக் கொள்வார்கள். அந்த வரிசையில், இண்டிகோ நிறுவனம், தீபாவளி பண்டிகைக்காக ரூ. 899க்கு உள்ளூர் விமான பயணத்தை அறிவித்து பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தீபாவளி பண்டிகையொட்டி இண்டியோ விமான நிறுவனம் அறிவித்துள்ள இந்த ஆஃபரில், பயணிகள் உள்ளூர் டிக்கெட் விலை ரூ.899க்கும், வெளிநாட்டு பயணிகளுக்கான விலை ரூ. 3999க்கும் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.
வரும் நவம்பர் 8 2018 ஆம் தேதி முதல் 15 ஏப்ரல் 2019 இடைப்பட்ட நாட்களுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்துக் கொள்ளலாம். 64 இடங்களுக்கான சுமார் 10 லட்சம் விமான டிக்கெட்டுகளை சலுகை விலையில் இண்டிகோ நிறுவனம் அறிவித்திருப்பது கூடுதல் தகவல்.
www.goindigo.in என்ற இணையதளம் மூலம் டிக்கெட்கள் சலுகை விலையில் கிடைக்கும் என்று இண்டிகோ தெரிவித்துள்ளது. மேலும் சலுகை விலை டிக்கெட்களை 15 நாள் பயணத்திற்கு முன்பே புக் செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.