சூப்பரான வட்டி.. இந்தப் பேங்க்ல ஃபிக்ஸட் டெபாசிட் டிரை பண்ணுங்க!

IndusInd வங்கி 61 மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட நிலையான வைப்புகளுக்கு, வங்கி 6.65% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

IndusInd வங்கி 61 மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட நிலையான வைப்புகளுக்கு, வங்கி 6.65% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
UCO Bank FD Interest Rates 2022 hiked by up to 135 bps

யூகோ வங்கி டிச.2ஆம் தேதிமுதல் FD விகிதங்களை உயர்த்தியுள்ளது.

வங்கிகள், தங்களை நோக்கி முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கத்தில் நிலையான வைப்பு நிதி (ஃபிக்ஸட் டெபாசிட்) வட்டி வீதங்களை அதிகரித்துவருகின்றன.
கடந்த காலங்களில் பஞ்சாப் நேஷனல் வங்கி, எஸ்.பி.ஐ, உள்ளிட்ட வங்கிகள் வட்டி வீதத்தை மாற்றியமைத்தன. அந்த வகையில் தற்போது இண்டஸ்இந்த் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஆகியவை ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி வீதங்களை மாற்றியுள்ளன.

Advertisment

ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிக்கு, புதிய FD விகிதங்கள் செப்டம்பர் 19 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. வங்கி இப்போது 7 சதவீதம் வரை வட்டி விகிதங்களுடன் நிலையான வைப்புகளை வழங்குகிறது.
7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையிலான முதிர்வு காலத்துடன் ரூ.25 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையிலான FDக்கு, வட்டி விகிதம் 3.75% ஆகும்.

15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரையிலான முதிர்வு காலத்துடன் கூடிய டெபாசிட்டுகளுக்கு, 4% ஆகும். 30 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை முதிர்ச்சியடையும் FDகளுக்கு, வட்டி விகிதம் 4.5% ஆகும்.
மேலும்,
91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை முதிர்ச்சியடையும் டெர்ம் டெபாசிட்டுகளுக்கு வங்கி 5 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.

180 நாட்கள் முதல் 364 நாட்கள் வரை முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 5.75% வட்டியும், 365 நாட்கள் முதல் 729 நாட்கள் வரை முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 6.75% வட்டியும் வழங்கப்படும்.
தொடர்ந்து,5 ஆண்டுகளுக்கான வரி-சேமிப்பு நிலையான வைப்புகளுக்கு பொது மக்களுக்கு 6.25% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 6.75% வட்டி விகிதமும் வழங்கப்படுகிறது.

Advertisment
Advertisements

சிட்டி யூனியன் வங்கி

சிட்டி யூனியன் வங்கிக்கான புதிய FD விகிதங்கள் செப்டம்பர் 23, 2022 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. திருத்தப்பட்ட வட்டி விகிதம் 15 முதல் 45 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 4.1% வழங்குகிறது.
தொடர்ந்து, , 46 முதல் 90 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 4.5%, கிடைக்கும். 3 ஆண்டுகளுக்கு மேலான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 6 சதவீதத்துக்கும் மேல் வட்டி கிடைக்கும்.

இண்டஸ்இந்த் வங்கி

IndusInd வங்கி இப்போது செப்டம்பர் 23 முதல் திருத்தப்பட்ட வட்டி விகிதத்தை வழங்குகிறது. வங்கி இப்போது 4% முதல் 6.65% வரையிலான வட்டி விகிதத்தை 7 நாட்கள் முதல் 61 மாதங்கள் மற்றும் அதற்கு மேல் முதிர்ச்சியடையும் FDகளுக்கு வழங்குகிறது.
31 நாட்களில் இருந்து 45 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் FDகளுக்கு 4.35%, 46 நாட்களில் இருந்து 60 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் FDகளுக்கு 4.45%, 61 நாட்களில் இருந்து 90 நாட்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 4.65% வழங்குகிறது.
61 மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட நிலையான வைப்புகளுக்கு, வங்கி 6.65% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fixed Deposits

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: