எஃப்.டி-க்கு 8.25% வரை வட்டி: இந்த தனியார் வங்கியை செக் பண்ணுங்க!

ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 8.25 சதவீதம் வட்டி வழங்கும் தனியார் வங்கி குறித்து பார்க்கலாம். இந்த வங்கி 2024 ஜூலை 2024 முதல் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது.

ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 8.25 சதவீதம் வட்டி வழங்கும் தனியார் வங்கி குறித்து பார்க்கலாம். இந்த வங்கி 2024 ஜூலை 2024 முதல் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Hoe to get more income from fixed deposits? - நிலையான வைப்புத் தொகை மூலம் அதிக வருமானம் பெறுவது எப்படி?

இண்டஸ்இந்த் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் 2024 ஜூலை 3 முதல் அமலுக்கு வந்துள்ளன.

இண்டஸ்இந்த் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி உயர்வு | தனியார் வங்கியான இண்டஸ்இந்த் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் 2024 ஜூலை 3ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன என வங்கியின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வங்கி, பொதுக் குடிமக்களுக்கு 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 3.50 சதவீதம் முதல் 7.75 சதவீதம் வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. 1 வருடம் முதல் 2 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு அதிகபட்ச வட்டி விகிதம் 7.75% வழங்கப்படுகிறது.

Advertisment

இண்டஸ்இந்த் ஃபிக்ஸட் டெபாசிட்

காலம்

 வட்டி விகிதம் (%)

7-14 நாள்கள் 3.5
15-30 நாள்கள் 3.5
31-45 நாள்கள் 3.75
46-60 நாள்கள் 4.75
61-90 நாள்கள் 4.75
91-120 நாள்கள் 4.75
121-180 நாள்கள் 5.00
181-210 நாள்கள் 5.85
211-269 நாள்கள் 6.10
270-354 நாள்கள் 6.35
355-364 நாள்கள் 6.50
1 ஆண்டு 3 மாதம் 6.75
15-16 மாதங்கள் 7.75
1 ஆண்டு 6 மாதம் 2 ஆண்டு 7.75
2 ஆண்டு 6 மாதங்கள் 7.25
2.6 ஆண்டு முதல் 2.7 ஆண்டு 7.25
3 ஆண்டு 3 மாதம் 61 மாதத்துக்குள் 7.25
61 மாதத்துக்கு மேல் 7.00
இண்டஸ் வரி சேமிப்பு எஃப்டி 7.25

வட்டி காலாண்டுக்கு ஒருமுறை கூட்டப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும். 180 நாட்கள் வரை பதவிக்காலம் இருக்கும் இடங்களில் டெபாசிட்டுக்கான முதிர்ச்சியின் போது எளிய வட்டி வழங்கப்படும்.

Advertisment
Advertisements

மூத்தக் குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட்

மூத்த குடிமக்களுக்கு 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் தவணைகளுக்கு 4% முதல் 8.25% வரையிலான நிலையான வைப்பு வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது. 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் எஃப்.டி-களுக்கு அதிகபட்ச வட்டி விகிதம் 8.25% வழங்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Fixed Deposits

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: